தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 இன்று வெளியிடப்பட்டு உள்ளது. நாளை காலை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட உள்ள நிலையில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாடு 2024-25 நிதியாண்டில் 8%க்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டு உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி அளவீட்டில் ஒப்பிடுகையில், 2023-ல் உலகப் பொருளாதாரம் 3.33% என்ற ரியல் ஜிடிபி வளர்ச்சியை பதிவு செய்தது. இந்திய பொருளாதாரம் 2022-23ல் 7.61% வளர்ச்சியையும், 2023-24ல் 9.19% வளர்ச்சியையும், 2024-25ல் 6.48% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இதை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளின் வலுவான அடித்தளத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்டு இருக்கும் காரணத்தால், 2021-22 நிதியாண்டு முதல் தொடர்ந்து 8% அல்லது அதற்கு அதிகமான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்து வருகிறது என இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விரிவான பொருளாதார ஆய்வறிக்கை மாநில அரசின் திட்டக் குழு, நிதித்துறை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாகும். மாநிலத்தின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை என்பதால் மிகவும் ஸ்பெஷல், இந்த அறிக்கையை தயாரித்த துறை அதிகாரிகள் இணைந்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
இந்த முதல் பொருளாதார ஆய்வறிக்கையில் மாநிலத்தின் விவசாயம், தொழில் மற்றும் சேவைகள் துறைகளை விரிவாக ஆய்வு செய்து தொகுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த அறிக்கையில் மாநிலத்தின் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி அளவீடுகள், பணவீக்கம், வேலைவாய்ப்பு நிலவரம் மற்றும் சமூகத் துறை குறிகாட்டிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
2022-23 நிதியாண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக இருந்தது, இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தை விட 1.64 மடங்கு அதிகமாகும். மேலும் இந்திய அளவில் அதிக தனிநபர் வருமானம் கொண்டுள்ள மாநில வாரியான பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 4% மற்றும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, 2023-24 ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களிப்பை வழங்கியுள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) தற்போதைய விலையில் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.27.22 லட்சம் கோடியாக இருந்தது. இந்த அளவீடுகள் மாநிலத்தின் வலுவான பொருளாதார செயல்திறனை படம் போட்டு காட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications