பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எந்த யோசனையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாறாக, வங்கிகளின் நிதி வலுவூட்டலுக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளை (PSU Bank) இணைக்கும் திட்டம் அரசின் முன் இல்லை என்று மத்திய அரசு ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த வங்கிகளின் நிதி அதிகாரம் பெற நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். வங்கித் துறையில் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. இது வங்கியின் மூலதன போதுமான விகிதத்தையும் (CAR) மற்றும் செயல்படாத கடன்களையும் மேம்படுத்தியுள்ளது என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 2019-ல் வங்கி அமைப்பில் பெரிய முன்னேற்றங்களைக் கண்டது. இதனால், நான்கு பெரிய வங்கிகளை இணைக்கப்பட்டது. எனவே 2017ல் இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12 ஆக குறைந்தது. இந்த இணைப்பு அரசு வங்கிகளை உலகளாவிய வங்கிகளாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை ஏப்ரல் 1, 2020 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டில், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடாவில் இணைக்கப்பட்டன. பாரதீய மகிளா வங்கி மற்றும் 5 வங்கிகள் எஸ்பிஐயுடன் இணைக்கப்பட்டன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எஸ்பிஐ அதன் பிறகும் சில வங்கிகள் இணைப்பு குறித்து அடிக்கடி வதந்திகள் வந்தன. தற்போது இதற்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications