2020-ல் பெட்ரோல் டீசல் விலை இவ்வளவு குறைந்திருக்கிறதா..? மேலும் விலை குறையுமா?

இன்றைய நவீன உலகத்தில் உணவு, நீர் எப்படி முக்கியமோ அதே போல, ஒவ்வொரு மனிதனுக்கு எரி பொருளும் முக்கியமாகிறது.

எல்லா நாடுகளும் தங்கள் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிய அளவில் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிபொருள் தற்சார்பு என்பது இன்னும் எட்டாக் கனியாகத் தான் இருந்து வருகிறது. சரி பெட்ரோல் டீசல் விலைக்கு வருவோம்.

 பெட்ரோல் வரலாற்று உச்சம்

பெட்ரோல் வரலாற்று உச்சம்

கடந்த அக்டோபர் 2018 முதல் வாரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமாராக 87 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரவுகள் சொல்கின்றன. அந்த விலை உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை இறக்கம் கண்டு வந்திருக்கிறது.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

பொதுவாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பெட்ரோல் டீசல் தொடங்கி விமான எரிபொருளான Air Turbine Fuel வரை எல்லா எரிபொருளின் விலையும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இந்த எரிபொருட்களின் விலையும் குறைந்து இருக்க வேண்டும் ஆனால் பெரிய அளவில் குறையவில்லை.

2014-ம் ஆண்டு

2014-ம் ஆண்டு

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமாராக 105 டாலரில் வர்த்தகமானது. அப்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஜூன் 07, 2014 அன்று 74.71 ரூபாயாக இருந்தது. ஒரு லிட்டர் டீசல் விலை ஜூன் 01, 2014 அன்று 61.12 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது பலரின் கேள்வியே இது தான். 105 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்ற போதே இவ்வளவு தான் விலை இருந்தது. இப்போது பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 35 டாலர் கூட இல்லை, ஏன் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை என்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் பார்ப்பதற்கு முன், இந்த ஆண்டில் பெட்ரோல் டீசல் விலை குறைவைப் பார்த்துவிடுவோம். கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமாராக 105 டாலரில் வர்த்தகமானது. அப்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஜூன் 07, 2014 அன்று 74.71 ரூபாயாக இருந்தது. ஒரு லிட்டர் டீசல் விலை ஜூன் 01, 2014 அன்று 61.12 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது பலரின் கேள்வியே இது தான். 105 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்ற போதே இவ்வளவு தான் விலை இருந்தது. இப்போது பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 35 டாலர் கூட இல்லை, ஏன் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை என்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் பார்ப்பதற்கு முன், இந்த ஆண்டில் பெட்ரோல் டீசல் விலை குறைவைப் பார்த்துவிடுவோம்.

பெட்ரோல்

பெட்ரோல்

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73.02 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 01 ஜனவரி 2020-ல் ஒரு லிட்டர் பெட்ரோல், சென்னையில் 78.12 ரூபாயாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை சுமாராக 5 ரூபாய் குறைந்து இருக்கிறது. ஆக பெட்ரோல் விலை 6.52 சதவிகிதம் விலை குறைந்து இருக்கிறது.

 டீசல்

டீசல்

பெட்ரோலைப் போலவே டீசல் விலையும், கணிசமாக குறைந்து இருக்கிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 66.48 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 01 ஜனவரி 2020-ல் ஒரு லிட்டர் டீசல், சென்னையில் 71.86 ரூபாயாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் டீசல் விலை சுமாராக 5.4 ரூபாய் குறைந்து இருக்கிறது. ஆக பெட்ரோல் விலை 7.52 சதவிகிதம் விலை குறைந்து இருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை Vs பெட்ரோல் டீசலுக்கு வருவோம்.

 விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 15 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விலையின் சராசரியைக் கணக்கிட்டு தான் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால் கடந்த சில நாட்களில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டதால் உடனடியாக நமக்கு பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதே விலை நீடித்தால் நமக்கு இன்னும் விலை குறையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+