சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் மட்டும் 1100 கோடி ரூபாய் அளவுக்கு இணையவழி நிதி மோசடி நடைபெற்றிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம் சார்பாக சென்னையில் சர்வதேச இணைய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இணைய பாதுகாப்பு என்பது ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நம்பிக்கையின் தூண் எனக் கூறினார். தகவல் திருட்டு தொடர்பாக ஐபிஎம் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி உலக அளவில் நடைபெற்ற தகவல் திருட்டுகளின் மூலம் 42.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட 10% அதிகம் எனக் கூறினார்.

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 7.9 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும் உலக அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்றும் அவர் கவலை தெரிவித்தார் . டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் நம் நாடு 19.48 கோடி ரூபாயை தகவல் திருட்டின் மூலம் இழந்திருக்கிறது என சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இணைய வழி நிதி குற்றங்களின் மூலம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பறிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இந்த இழப்புகள் இணைய பாதுகாப்பை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது என தெரிவித்தார். தமிழ்நாட்டை பொறுத்தவரை டிஜிட்டல் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் மாநிலம் என சுட்டிக்காட்டிய அவர், சைபர் குற்றங்களை எதிர்த்து போராட உலக தொழில்நுட்ப வல்லுனர்களோடு இணைந்து பயணம் செய்ய தமிழகம் தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.
இந்த சர்வதேச இணைய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் இணைய பாதுகாப்புக்கான போர் என்ற தலைப்பில் மொத்தம் 250 பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர் . பிரபல கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்களான இ சட், கேஸ்பர் ஸ்கை, கே7 செக்யூரிட்டி போன்ற நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்களும் இதில் பங்கேற்றனர். அண்மை காலமாக இணையவழியில் மக்களிடம் பணம் பறிக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications