மும்பை: 2024 ஆம் ஆண்டு முடிந்து புது ஆண்டு தொடங்க இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு காலண்டர் வந்த உடனே பள்ளி மாணவர்கள் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என பார்ப்பார்கள். அப்படி பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விடுமுறை நாட்களை பார்ப்பாளர்கள். அவர்களுக்காகவே பங்குச்சந்தை விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
2025இல் இந்திய பங்குச்சந்தைகளுக்கு 14 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத. புத்தாண்டு தொடங்க இருக்கும் நிலையில் தேசிய பங்குச்சந்தையான NSE மற்றும் மும்பை பங்குச்சந்தையான BSE சார்பாக அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுவாக இந்தியாவில் திங்கள் முதல் வெள்ளி என வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இந்திய பங்குச் சந்தைகள் செயல்படும். சனி ஞாயிறன்று வழக்கமாகவே விடுமுறை நாட்களாக இருக்கும். அது தவிர சில குறிப்பிட்ட நாட்களில் நம் பங்குச்சந்தைக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு 14 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி, மே, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் தலா ஒரு நாள் வருகிறது. மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா இரண்டு நாட்களும், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா மூன்று நாட்களும் விடுமுறை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை விடுமுறை நாட்கள்:
பிப்ரவரி 26 புதன்கிழமை, மகாசிவராத்திரி
மார்ச் 14 வெள்ளி, ஹோலி
மார்ச் 13 திங்கள், ரம்ஜான்
ஏப்ரல் 10 வியாழன் மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14 திங்கள், பாபா சாகே அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 18 வெள்ளி, புனித வெள்ளி
மே 1 வியாழன், மகாராஷ்ட்ரா தினம்
ஆகஸ்ட் 15 வெள்ளி, சுதந்திர தினம்
ஆகஸ்ட் 27 புதன், விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 வியாழன், காந்தி ஜெயந்தி மற்றும் தசரா
அக்டோபர் 21 செவ்வாய், தீபாவளி
அக்டோபர் 22 புதன், தீபாவளி பலிபிரதிபடா
நவம்பர் 5 புதன், ஸ்ரீ குரு நானக் தேவ்
டிசம்பர் 25 வியாழன், கிறிஸ்துமஸ்
பொதுவாக குடியரசு தினம், ராமநவமி, பக்ரீத், மொஹரம் ஆகிய நாட்களிலும் இந்திய பங்குச் சந்தைகள் செயல்படாது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் இந்த பண்டிகைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் பிரச்சனை இல்லை.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications