நட்சத்திர முதலீட்டாளர் விஜய் கேடியா அவரது மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான போர்ட்ஃபோலியோ மற்றும் அவரது முதலீடுகள் பெரும்பாலும் சிறப்புவாய்ந்தவை என்று பெயர் பெற்றவர். விஜய் கேடியா நன்கு அறியப்பட்ட பங்குச் சந்தை முதலீட்டாளர் மற்றும் அவரது போர்ட்ஃபோலியோவின் மொத்த மதிப்பு ரூ.1800 கோடி ஆகும்.
இந்த நிலையில், விஜய் கேடியா தனது சமீபத்திய சமூக வலைதள போஸ்டில், 90 மணிநேரம் வேலை செய்யும் ஊழியர்களின் விவாதம் குறித்து நகைச்சுவையாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

எல் அண்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் வாரத்தில் 90 மணிநேரம் வேலை செய்யும் ஊழியர்கள் குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை அளித்திருந்தார். அதில் வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியர்களை வேலை செய்ய முடியவில்லை என்று வருத்தமாக உள்ளதாகவும், அவர்களால் எவ்வளவு நேரம் தங்கள் மனைவிகளை பார்த்து கொண்டே இருக்க முடியும், என்று கேள்விகேட்டுள்ளார். வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவியை உற்றுப் பார்க்க முடியும்? மனைவிகள் தங்கள் கணவர்களை எவ்வளவு நேரம் முறைத்துப் பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையைத் தொடங்குங்கள் என்று கூறியுள்ளார். இது L&T முதலாளியின் இந்த உணர்ச்சியற்ற அறிக்கை ஆன்லைனில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இதில் பல வணிகத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஒட்டுமொத்த தொழில்துறையிலிருந்தும் கருத்துகள் வருகின்றன. 90 மணி நேர வேலை வாரத்தை ஆதரித்து L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனின் அறிக்கை குறித்து நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் முதல் வணிகத் தலைவர்கள் வரை தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நட்சத்திர முதலீட்டாளரான விஜய் கேடியாவும் இந்த விவகாரத்தில் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். இன்று அலுவலகத்தில் ஒரு மனதைக் கவரும் தருணம் என்று X இல் போஸ்ட் செய்துள்ளார். அலுவலகத்தில் முதலாளி சமீபத்தில் ஒரு லம்போர்கினி வாங்கினார். அவரை வாழ்த்துவதற்காக நாங்கள் கூடினோம். அவருடைய வார்த்தைகள் எங்களுக்கு உத்வேகம் அளித்தன என்று கூறியுள்ளார்.
அதில், இந்த சாதனைக்காக அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்கள் அயராத 90 மணிநேர வாரங்கள் இந்த லம்போர்கினியை நிஜமாக்கியது. இன்று, உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். ஊழியர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்தால், அடுத்த ஆண்டு மற்றொரு லம்போர்கினியை முதலாளி வாங்க முடியும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எல் அண்ட் டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியனின் இந்த அறிக்கைக்கு, கேடியா மட்டுமின்றி, ஆனந்த் மஹிந்திரா, ஆதார் பூனாவாலா, அனுபம் மிட்டல் போன்ற பல பிரபலங்களும் எல்&டி தலைவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை விமர்சித்துள்ளனர். மஹிந்திரா& மஹிந்திராவின் தலைவர் மஹிந்திரா சமீபத்தில், நீண்ட வேலை நேரம் பற்றிய விவாதம் தவறான திசையில் செல்கிறது. ஏனெனில் அது வேலை நேரத்தின் அளவைக் குறித்து கவனம் செலுத்துகிறது.
ஆனந்த் மஹிந்திரா இளைஞர்களிடம், நான் நாராயண மூர்த்தி (இன்ஃபோசிஸ் நிறுவனர்) மற்றும் பிறரை மிகவும் மதிக்கிறேன். எனவே இதை தவறாகப் புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த விவாதம் தவறான திசையில் செல்கிறது என்று நினைக்கிறேன். நான் தனியாக இருப்பதால் சமூக ஊடகங்களில் X இல் முழு நேரம் இல்லை. ஆனால், என் மனைவி மிகவும் நல்லவர். நான் அவளை உற்றுப் பார்க்க விரும்புகிறேன். நான் அவருடன் அதிக நேரம் செலவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications