AI காலம்.. சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருக்கணும்.. இல்லைன்னா ரொம்ப கஷ்டம்! TCS, Infosys என்ன செய்ய போகிறது?

டெக் உலகம் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றத்தை தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் எதிர்கொண்டு வருகிறது, இதனால் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் இந்த திடீர் மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமலும், உடனாடியாக மாற முடியாமலும் சிக்கித்தவித்து வரும் வேளையில் சிறு நிறுவனங்கள் இந்த கடினமான சூழலை எளிதாக கடக்கிறது.

ஒரு புதிய தொழில்நுட்பத்தில் உடனடியாக ஒரு நிறுவனம் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால் இன்றைய காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை மேம்படுத்தி, புதிய ஆர்டர்கள் பெற்று, வர்த்தகத்தை பெறுவது என்பது இன்றைய ஏஐ யுகத்தில் நடக்காத காரியம்.

AI காலம்.. சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருக்கணும்.. இல்லைன்னா ரொம்ப கஷ்டம்! TCS, Infosys என்ன செய்ய போகிறது?

இதற்கான ஒரே தீர்வு இத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்தை வாங்குவது தான். இதை இந்தியாவில் இருக்கும் பல மிட் சைஸ் நிறுவனங்கள் சிறப்பாக செய்து வருகிறது.

சமீபத்தில் Persistent Systems நிறுவனம் ஜெர்மனி நாட்டின் டேட்டா இன்ஜினியரிங் நிறுவனமான Nagarro-வை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதேபோல் Coforge சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் Encora என்னும் நிறுவனத்தை சுமார் 2.35 பில்லியன் டாலருக்கு வாங்கியது. Encora நிறுவனம் டேட்டா இன்ஜினியரிங், ஏஐ, கிளவுட் இன்ஜினியரிங் போன்ற துறையில் சிறந்து விளங்குகிறது.

இதன் விளைவு என்ன தெரியுமா..? 2025-26ஆம் நிதியாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ் விப்ரோ, ஹெச்சில் இணைந்து 80 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டினாலும் வளர்ச்சி என்னவோ 4-5 சதவீதம் தான்.

Also Read

ஆனால் மிட் சைஸ் நிறுவனங்களான Coforge, Persistent Systems, Mphasis மற்றும் Hexaware ஆகியவை நிறுவன கைப்பற்றல் மூலம் தனது வர்த்தகம் + சேவையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது மூலம் 7 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டினாலும், வளர்ச்சி அளவீடு என பார்த்தால் டபுள் டிஜிட்டில் உள்ளது. குறிப்பாக Coforge சுமார் 30 சதவீதம் வரையிலான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்த மிட் சைஸ் நிறுவனங்கள் நிறுவன கைப்பற்றல் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் தன்னை மேம்படுத்தியுள்ள காரணத்தால் வெளிநாட்டுகளில் மிகவும் எளிதாக 100 மில்லியன் ஒப்பந்தங்களை பெறுகிறது. முன்பெல்லாம் 100 மில்லியன் டாலர் ஒப்பந்தம் பெரிய நிறுவனங்களுக்கானதாக இருந்த கதை தற்போது மொத்தமாக மாறியுள்ளது.

காலம் காலமாக இந்திய ஐடி சேவை துறையில் பெரிய நிறுவனங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிக ஊழியர்களை வைத்திருிக்க வேண்டும் என்ற கணக்கு மொத்தமாக மாறியுள்ளது. இதற்கு உதாரணமாக Coforge சமீபத்தில் Sabre Corp நிறுவனத்திடம் இருந்து சுமாக் 1.56 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை பெற்று அசத்தியது. இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை என்னவோ வெறும் 45000 மட்டுமே.

Recommended For You

AI தொழில்நுட்பம் வந்த பின்பு 2 முக்கிய மாற்றம் நடந்துள்ளது.

ஏஐ-க்கு முன்பு இந்திய ஐடி நிறுவனங்கள் வெறுமென சேவை மட்டுமே விற்பனை செய்யும், ஆனால் தற்போது அதன் திறன் + விளைவுகளை எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில் விற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் நிறுவனத்தில் திறன்மிக்க ஊழியர்கள் இருந்தால் போதுமானது, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேவையில்லை. இதனாலேயே நிறுவன கைப்பற்றல் தற்போது பெரிய அளவில் பலன் அளிக்கிறது.

அடுத்த பெரிய மாற்றம் ஏஐ-க்கு முன்பு ஒரு ஐடி சேவை திட்டம் என்றால் 5-7 ஆண்டுகள் வரையில் சர்வசாதாரணமாக செயல்படுத்தப்படும். தற்போது ஏஐ மூலம் கோடிங், டெஸ்டிங் செய்யப்படுவதால் குறுகிய கால கான்டிராக் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இதனால் லட்ச கணக்கான ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டுமெனில் சேல்ஸ் டீம் தற்போதைய எண்ணிக்கையை காட்டிலும் 2-3 மடங்கு அதிக ஒப்பந்தங்களை கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதுவும் பெரிய நிறுவனங்களுக்கு தற்போது முக்கிய தலைவலியாக மாறி வருகிறது.

You May Also Like

இதனால் இந்த ஏஐ யுகத்தில் சிறிய நிறுவனமாக இருந்தாலும், வலுவான நிறுவனமாக இருந்தால் கட்டாயம் பெரும் லாபத்தை பெற முடியும் (சிக்குன்னு சிறுத்த குட்டியா இருக்கனும்).

ஆனால் பெரிய நிறுவனமாக இருந்து வேகமாக செயல்பட முடியாமல் இருந்தால் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போதைய நிலையில் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய பிராசஸ் கட்டமைப்பை மேம்படுத்திய சிறியதாக மாற்றும் பட்சத்தில் குறைந்த காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ப்ராஜெக்ட்களை மேற்கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+