வரும் காலத்தில் ஐடி துறையில் புரோகிராமர்கள் தேவைப்பட மாட்டார்கள் ஏஐ மாடல்களுக்கான டிரெய்னர்களே தேவைப்படுவார்கள் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் ஹெச்1பி விசா விவகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை குறித்து விரிவான பார்வையை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்க இருக்கும் சூழலில் ஹெச்1பி விசா நடைமுறையில் அமெரிக்க அரசு பல்வேறு மாற்றங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாவை பெருமளவில் நம்பி இருக்கக்கூடிய டிசிஎஸ் நிறுவனத்தை இது எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள கீர்த்தி வாசன் எங்கள் நிறுவனத்தில் சுமார் ஆறு லட்சம் பேர் பணிபுரிகின்றனர் அவர்களில் 3000 முதல் 4000 பேர் வரை நாங்கள் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிக்கு அமர்த்துகிறோம். ஆனால் அண்மைக்காலமாக நாங்கள் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவே முன்னுரிமை தருகிறோம் என கூறுகிறார்.
அமெரிக்காவில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் 50 சதவீதம் பேர் உள்நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்றும் அவர் கூறுகிறார். ஹெச்1பி விசாவை சார்ந்திருக்கும் போக்கு குறைந்து வருகிறது என தெரிவித்திருக்கும் கீர்த்தி வாசன் குடியுரிமை தொடர்பான எந்த ஒரு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் அதனை நாங்கள் பார்த்து கொள்வோம் என கூறியுள்ளார்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது குறித்த கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்துள்ள கீர்த்தி வாசன் புதிய தொழில்நுட்பங்கள் ஐடி நிறுவனங்களின் செயல் திறனை அதிகரித்துள்ளன எனக் கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை மென்பொருள் பொறியியல் பிரிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இன்னும் வரும் காலங்களிலும் நாம் பெரிய பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்புகளை அழித்துவிட்டு மனிதர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளார். அதாவது வரும் காலங்களில் ஐடி பிரிவில் புரோகிராமர்கள் அல்லது டெஸ்டர்களுக்கான தேவை இருக்காது அதற்கு பதிலாக ஏஐ மாடல்களுக்கு பயிற்சி வழங்கக்கூடிய டிரெய்னர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனம் இதுவரை 5 லட்சம் ஊழியர்களுக்கு ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியை வழங்கி இருக்கிறது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது தங்கள் நிறுவனம் ஜெனரேட்டிவ் ஏஐ சார்ந்த ப்ராஜக்ட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவன கட்டமைப்பை டிஜிட்டல் ரீதியாக மாற்றும் பெரிய ஒப்பந்தம் எங்கள் கையில் இருக்கிறது இருந்தாலும் மற்ற ஒப்பந்தங்களை பெறுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications