சென்னை: நீண்ட கால அடிப்படையான நிதி இலக்குகளை எட்டுவதற்கு எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதுதான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். அந்த வகையில் எவ்வளவு இளம் வயதிலேயே நமது முதலீட்டை தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவாக நம்முடைய நிதி இலக்கினை எட்ட முடியும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். இதற்குக் காரணம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் நமக்கு காம்பவுண்டிங் முறையில் கிடைக்கும் லாபம் தான்.
உதாரணமாக மாதத்திற்கு 10,000 ரூபாய் முதலீடு செய்பவர்கள் எப்படி 5 கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பினை பெற முடியும், அதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் .இந்த மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் தரக்கூடியதாக இருக்கிறது என்றால் நீங்கள் 35 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் என்ற நிதி இலக்கினை எட்டிவிட முடியும். அதாவது இந்த 35 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை 40.80 லட்சம் ரூபாய். உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தொகை 5.51 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும்.
இதே 10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீட்டை 13 சதவீதம் லாபம் தரக்கூடிய நிதியில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் உங்களது பணம் 32 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் என்ற மதிப்பை எட்டும். இந்த 32 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீட்டின் அளவு 39 .60 லட்சம் ரூபாய். உங்களுக்கு கிடைக்கும் லாபம் 5. 47 கோடி ரூபாய் ஆகும்.
10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீடு உங்களுக்கு ஆண்டுக்கு 14% லாபம் தருகிறது என வைத்துக் கொண்டால் 31 ஆண்டுகளிலேயே உங்களுக்கு 5 கோடி ரூபாய் கிடைத்துவிடும். இந்த 31 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு 37. 20 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் தொகை 5.25 கோடி ரூபாய்.
10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீட்டினை ஆண்டுக்கு 15 சதவீதம் லாபம் தரக்கூடிய நிதியில் முதலீடு செய்திருந்தால் 29 ஆண்டுகளிலேயே உங்களது பணம் 5 கோடி ரூபாய் என்ற அளவை எட்டிவிடும். இந்த 29 ஆண்டு காலத்தில் நீங்கள் செய்த முதலீடு 36 லட்சம் ரூபாயாகவும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பணம் 5.63 கோடி ரூபாயாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications