உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் கடுமையான வறுமையில் வாழ்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதும் பேரதிர்ச்சியான ஒன்று. குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இருப்பதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலகப்போர் உள்ளிட்ட மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வறுமை விகிதங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும், இவற்றில் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உலகின் பெரும்பாலான ஏழை மக்கள் வசிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு (OPHI) வெளியிட்ட ஆய்வறிக்கையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் அதிக மோதல்களைக் கண்டதால், போரில் உள்ள நாடுகளில் வறுமை விகிதங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதை இது சுட்டிகாட்டியுள்ளது.
ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பு மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மனித மேம்பாட்டு அமைப்பு ஆகியவை 2010 முதல் ஆண்டுதோறும் தங்கள் பல பரிமாண வறுமைக் குறியீட்டை (Multidimensional Poverty Index) வெளியிட்டு, 6.3 பில்லியன் மக்களைக் கொண்ட 112 நாடுகளில் இருந்து தரவுகளை சேகரித்து வந்தன. இவற்றில் போதிய வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிபொருள், ஊட்டச்சத்து மற்றும் பள்ளி வருகையின் பற்றாக்குறை போன்ற குறிகாட்டிகளைப் பயன்படுத்தியுள்ளன.
அவற்றில் 2024ல் அந்த வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் 1.1 பில்லியன் மக்கள் வறுமையில் உள்ளதாகவும், அவர்களில் 455 மில்லியன் பேர் போர் நிகழ்ந்த இடத்தின் நிழலில் வாழ்கின்றனர் என்று ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பின் தலைமை புள்ளியியல் நிபுணர் யான்சுன் ஜாங் கூறியுள்ளார். மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு , அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மிகப்பெரிய போராட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை கடந்த ஆண்டு முதல் 110 நாடுகளில் உள்ள 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் தீவிர பல பரிமாண வறுமையில் உள்ளதை சுட்டிகாட்டியுள்ளது. மேலும், இந்த அறிக்கைகள் 18 வயதுக்குட்பட்ட சுமார் 584 மில்லியன் மக்கள் தீவிர வறுமையை அனுபவித்து வருவதாகக் காட்டியது. இதில் உலகளவில் 27.9 சதவீத குழந்தைகள் மற்றும் 13.5 சதவீத பெரியவர்களில் அடங்குவர். உலகின் மிக ஏழ்மையான மக்களில் 83.2 சதவீதம் பேர் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர் என்பதையும் இது காட்டுகிறது.
மேலும் இதுகுறித்து ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சியின் இயக்குனர் சபீனா அல்கிரே கூறுகையில், மோதல்கள் வறுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தடுத்து வருவதாக கூறியுள்ளார்.
அதேபோல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 234 மில்லியனைப் பாதிக்கும் தீவிர வறுமையில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1.1 பில்லியன் ஏழை மக்களில் ஏறக்குறைய பாதியளவை இந்த ஐந்து நாடுகளும் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications