சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக மனைவியாகும் இளம்பெண்கள்.. விரைவில் விவாகரத்து.. ஷாக் ரிப்போர்ட்.!!

இந்தோனேசியாவில் ஏழை இளம்பெண்கள் சுற்றுலா பயணிகளை திருமணம் செய்யும் சர்ச்சைக்குரிய திருமணம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இன்ப திருமணம் (Pleasure Marriages) என்று அழைக்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் கிராமப்புறங்களில் சுற்றுலாவுக்கான புதிய அணுகுமுறை ஆனது பரவலான விமர்சனத்தை ஈர்த்து வருகிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட அறிவிப்பில், சுற்றுலாப் பயணிகள், ஏழைப் பின்னணியைச் சேர்ந்த இளம் பெண்களை குறுகிய காலத்திற்கு திருமணம் செய்துகொள்வதாக ஷாக் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகளாக வரும் ஆண்கள் பணம் கொடுத்து தற்காலிக திருமணங்களை நடத்துகின்றனர். பின்னர், சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்லும்போது அந்த உறவை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

 சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக மனைவியாகும் இளம்பெண்கள்.. விரைவில் விவாகரத்து.. ஷாக் ரிப்போர்ட்.!!


முக்கியமாக மேற்காசிய நாடுகளில் இருந்து இந்தோனேசியாவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள புன்காக் பகுதியில்தான் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது அரேபிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும்.

இதற்காக இங்குள்ள ஏஜென்சிகள் இளம் இந்தோனேசியப் பெண்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அறிமுகப்படுத்துகின்றன. அப்போது இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், விரைவில் முறைசாரா திருமண விழா நடத்தப்படுவதாகவும், இதற்குப் பிறகு, சுற்றுலாப் பயணி அந்த பெண்ணிடம் வரதட்சணையாக பணத்தை பெற்றுகொள்வதாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு, இளம் பெண் சுற்றுலாப்பயணியுடன் வாழ்க்கை நடத்துவதுடன் அந்த சுற்றுலா நபரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணி திரும்பிச் செல்லும் போது, ​​திருமண ஒப்பந்தம் முடித்து கொள்வதுடன், அந்த திருமண உறவு அத்துடன் கலைக்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், இத்தகைய திருமணங்களை இன்பத் திருமணங்கள் (Pleasure Marriage) என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு தொழிலாக வளர்ந்து, சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக தகவல்கள் உள்ளன. இதுபோன்ற தற்காலிக திருமணங்களை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்ற ஏஜென்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு கஹாயா என்ற இந்தோனேசியப் பெண் அளித்த பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை 15 முறை திருமணம் செய்ததாக அவர் கூறுகிறார். சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது முதியவருக்கு முதல் திருமணம் நடந்ததுடன் 850 டாலர்கள் (ரூ. 71,142) பணத்தை அவர் பெற்றதாகவும் இதிலிருந்து முகவர்களும், இடைத்தரகர்களும் தங்கள் பங்கை எடுத்துக் கொண்ட நிலையில், எஞ்சிய தொகையில் பாதிதான் கிடைத்ததாகவும் கூறுகிறார். அத்துடன் ஐந்து நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணி திரும்பிச் சென்று விட்டதாகவும் அத்துடன் விவாகரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார். ஒரு திருமணத்திற்கு $300 முதல் $500 வரை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய தற்காலிக திருமணங்கள் இந்தோனேசிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், இந்தோனேசியாவில் திருமணத்தின் குறிக்கோள் நீண்ட மற்றும் நிலையான உறவாகக் கருதப்படுகிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, பிடிபட்டால், அபராதம், சிறைத்தண்டனை, சமூக மற்றும் மத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதே நேரத்தில், இந்த நடைமுறைக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பெண்கள் வாழ்க்கையை சீரழிப்பதற்கு வழிவகுக்கின்றன என்ற கவலை எழுந்துள்ளது. இது மனித கடத்தலுக்கு சமம் என்றும், பெண்களின் உரிமை மீறல் என்றும் வாதங்கள் உள்ளன. ஏழை இளம் பெண்களின் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் கீழ்த்தரமான செயல் இது என்று விமர்சனம் வலுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+