ரூ.40 லட்சத்தை பங்குச்சந்தையில் இழந்த பெண்.. கை கொடுத்த "கவுன் பனேகா க்ரோர்பதி" கேம் ஷோ!

கவுன் பனேகா க்ரோர்பதி சீசன் 16-இன் சமீபத்திய எபிசோடில், மான்சி லஹெரு என்ற போட்டியாளர் தனது வாழ்க்கைப் பயணத்தை தொகுப்பாளரான அமிதாப் பச்சனுடன் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண் பங்குச்சந்தையில் ரூ.40 லட்சத்தை முதலீடு செய்து இழந்துள்ளார். அதன் பிறகு தானும், தன்னுடைய கணவரும் சந்தித்த நிதிப் பிரச்சனைகள் குறித்தும் பேசியிருப்பார். "ஃபாஸ்டஸ்ட் ஃபிங்கர் ஃபர்ஸ்ட்" சுற்று மூலம் ஹாட் சீட்டில் தனது இடத்தைப் பெற்ற மான்சி, மிகுந்த ஆர்வத்துடன் விளையாட்டைத் தொடங்கினார், மேலும் பிக் பி உடனான அவரது கலகலப்பான தொடர்பு எபிசோடை ஈர்க்கும் வகையில் இருந்தது.

அதன் பிறகு மான்சிக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான முதல் கேள்வி கேட்கப்பட்டது. "இந்த உபகரணங்களில் பழங்கள், பால் பொருட்கள், முட்டை மற்றும் வெவ்வேறு லிக்விட் ஐட்டங்கள் இருக்கும்?" அதற்கு அவரும் நம்பிக்கையுடன் பிரிட்ஜ் என்று பதில் அளித்தார்.

 ரூ.40 லட்சத்தை பங்குச்சந்தையில் இழந்த பெண்.. கை கொடுத்த

அமிதாப் பச்சனுடனான உரையாடலின் போது மான்சி தனது குடும்பத்தின் நிதி சிக்கல்கள் குறித்தும் பேசியிருந்தார். பங்குச்சந்தையில் மான்சி ரூ.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல்.. அந்த முதலீடு மொத்தமாக நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தனக்கும் தனது கணவருக்கும் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர் பகிர்ந்திருந்தார். அதே எபிசோடில் மான்சி விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் முதலீடு செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த அனுபவம் தனக்கு பின்னடைவை தந்ததாகவும் கூறி இருப்பார். அமிதாப் பச்சன் அவரது நேர்மை மற்றும் விடாமுயற்சியை குறித்து பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து உமிழ்நீர் சுரப்பி தொடர்பான கேள்வி மான்சியிடம் கேட்கப்பட்டது. அதற்கும் பதில் அளித்து 20,000 ரூபாயை பெற்றார். மான்சி போஸ்ட் வுமன் ஆகவும், டீச்சராகவும் 2 வேலைகளைப் பார்த்து சம்பாதித்து இரண்டு வேலைகளையும் பார்த்துள்ளார். இதனால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் அந்த எபிசோடில் கூறியிருப்பார்.

மான்சியின் தன்னம்பிக்கைக்கு பலன் கிடைத்தது. அவர் படிப்படியாக கேள்விகளுக்கு பதில் அளித்து இறுதியில் 12,50,000 ரூபாய் வென்றார். அமிதாப்பச்சனிடம் ஒரு இதயபூர்வமான கடிதத்தை கொடுத்து கண்ணீருடன் தனது நன்றியை வெளிப்படுத்தினா.ர் எங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை வந்துள்ளது என்று கூறியிருந்தார்.

பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை அதிகரித்தாலும், அதோடு தொடர்புடைய அபாயத்திற்கும் தயாராகத்தான் முதலீடு செய்ய வேண்டும், ஒருவேளை பங்குச்சந்தை முதலீட்டுக்கு வருமானம் கிடைக்காமல் போனாலும் தன்னால் எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை வாழ முடியும் என்று கருதுவோர் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+