இந்தியாவில் மும்பை நகரமானது சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில் மக்கள் வசிக்கக்கூடிய பகுதி என்று பார்த்தால் சுமார் 34,000 ஏக்கர் என்று குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மும்பை நகரத்தில் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மிகப்பெரிய நில உரிமையாளர்கள் 10% சதவீதத்திற்கும் மேலான நிலத்தை வைத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் உள்ள குடிசைப் பகுதிகளை மறுசீரமைக்கும் திட்டங்களை ஒழுங்குபடுத்தும் குடிசை மறுவாழ்வு ஆணையம் (SRA) கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, மும்பையின் ரியல் எஸ்டேட் சந்தையானது 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து விரிந்த நிலங்களைக் கொண்டுள்ளது. அதில் சுமார் 34,000 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. நிதி மூலதனத்தில் உள்ள மொத்த நிலத்தில் கிட்டத்தட்ட 20% வைத்திருக்கும் மிகப் பெரிய நில உரிமையாளர்களின் சிலர் நிதி மூலதனமாக இருப்பதாகக் கூறியுள்ளது.

இதில், குடும்பங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட தனியார் நிறுவனங்களான ஒன்பது நில உரிமையாளர்களுக்கு சுமார் 20% சொந்தமானதாக உள்ளது. இவற்றில் மும்பையின் விக்ரோலி பகுதியில் உள்ள கோத்ரேஜ் குடும்பத்திற்கு சொந்தமான 20% பகுதியின் ஏறக்குறைய பாதி குடியிருப்பு பகுதியை கொண்டுள்ளது.
1. கோத்ரெஜ் ப்ராப்பர்டிஸ்
குடிசை மறுவாழ்வு ஆணையத்தின்படி, மும்பையின் விக்ரோலி பகுதியில் 3,400 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் கோத்ரேஜ் குடும்பம் மும்பையின் அதிக நில வைத்துள்ள உரிமையாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கணக்கெடுப்பின்படி, கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் (EEH) விக்ரோலியில் நிலம் அமைந்துள்ளது.
நிறுவனமானது சோப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை கால்பதித்துள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் நிறுவனக் குடும்பம், ஜூன் 2024 இல்சொத்துக்களை பிரிப்பதற்கான ஒப்பந்தம் செய்தது. அதில் ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் கோத்ரேஜ் ஆகியோர் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களை பட்டியலிடப்பட்ட ஐந்து நிறுவனங்களை வைத்துள்ளனர்.
அதே சமயம் உறவினர்கள் ஜம்ஷித் மற்றும் ஸ்மிதாவிற்கு பட்டியலிடப்படாத கோத்ரேஜ் & பாய்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் உள்ள பிரதான சொத்து உட்பட நிலமும் உள்ளது. கோத்ரேஜ் குடும்பத்திற்குச் சொந்தமான சுமார் 3,400 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளன. ஆனால் இந்த நிலத்தின் மதிப்புகள் சுமார் ரூ.50,000 கோடியைத் தொடக்கூடும் என்று மும்பையின் மத்திய புறநகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஒருவர் கூறியுள்ளார். விக்ரோலி மும்பையின் மத்திய புறநகர்ப் பகுதியில், போவாய், முலுண்ட், பாண்டுப் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு சில அடுக்குகளில் காடு, சதுப்புநிலங்கள், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
2. FE Dinshaw டிரஸ்ட்
இந்த பட்டியலில் எஃப்இ டின்ஷா அறக்கட்டளை இரண்டாவது இடத்தில் உள்ளது. இது மும்பையில் சுமார் 683 ஏக்கர் நிலத்தை கொண்டுள்ளது. குடிசை மாற்று ஆணைய கணக்கெடுப்பின்படி, மலாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலங்கள் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமானது ஆகும்.
எஃப்இ டின்ஷா ஆனது ஒரு பார்சி சட்ட ஆலோசகர்-நிதியாளர் ஆவார். இவர் 1936 இல் இறந்தார். டின்ஷா குடும்பத்திற்காக பெரிய நிலங்களை இங்கு விட்டுச் சென்றுள்ளார். அவை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
3. பிரதாப்சிங் வல்லபதாஸ் சுர்ஜியின் குடும்பம்
மும்பையில் உள்ள மூன்றாவது பெரிய நிலப்பரப்பை பிரதாப்சிங் வல்லபதாஸ் சுர்ஜியின் குடும்பம் வைத்துள்ளது. இது மும்பையின் பாண்டுப் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 647 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறது.
4. ஜீஜீபோய் அர்தேஷிர் டிரஸ்ட்
மும்பையில் நான்காவது பெரிய நிலபரப்பை ஜீஜீபோய் அர்தேஷிர் அறக்கட்டளைக்கு சொந்தமானது. மும்பையின் செம்பூரில் 508 ஏக்கர் நிலம் உள்ளது.
5. தி AH வாடியா டிரஸ்ட்
குர்லாவில் அறக்கட்டளைக்கு 361 ஏக்கர் உள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மும்பை சமாச்சாரின் காமா குடும்பம், அறக்கட்டளையை நிர்வகித்து வந்தது. செம்பூரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிலம் அதற்குச் சொந்தமானது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அர்தேஷிர் ஹோர்முஸ்ஜி வாடியா, குர்லாவிற்கான குத்தகையை ரூ.3,587க்கு ஆண்டு வாடகைக்கு எடுத்த நிலையில்,அது இப்போது பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
6. பைராம்ஜி ஜீஜீபோய் குரூப்: குடிசை மாற்று ஆணைய கணக்கெடுப்பின்படி, மும்பையின் பல்வேறு பகுதிகளில் பைராம்ஜி ஜீஜீபோய் அறக்கட்டளைக்கு 269 ஏக்கர் நிலம் உள்ளது. சர் பைராம்ஜி ஜீஜீபோய், 19 ஆம் நூற்றாண்டின் பார்சி நன்கொடையாளர் ஆவார். 1830 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து மொத்தம் 12,000 ஏக்கர் நிலத்துடன் ஏழு கிராமங்களைப் பெற்றார். அறிக்கைகளின்படி, இப்போது தாஜ் ஹோட்டல் இருக்கும் பாந்த்ரா லேண்ட்ஸ் எண்ட் அவருக்கு சொந்தமானது.
இவர்களை தவிர, சர் முகமது யூசுப் கோட் டிரஸ்ட், வி.கே. லால் குடும்பத்தினர் போன்ற பிற தனியார் நில உரிமையாளர்களும் மும்பையின் கஞ்சூர்மார்க் மற்றும் கண்டிவலி பகுதியில் பெரிய அளவிலான நிலங்களை வைத்துள்ளனர்.
மும்பை வரலாறு: பார்சி சமூகத்தினர் மும்பையில் பல்வேறு நிலங்களை வைத்துள்ளனர். முந்தைய காலங்களிலிருந்தே இந்தியாவில் கிராம நிலப்பரப்பில் அப்போதைய ஆட்சியாளர்களின் சார்பாக கிராமத்தின் விவசாய விளைபொருட்களுக்கு வரி வசூலித்தனர். அவர்களில் ஜமீன்தார், தேஷ்முக், கோட் ஆகியவர்கள் அடங்குவர்.
போர்த்துகீசியர்கள் வடக்கு கொங்கனைக் கைப்பற்றியபோது, அதன் தலைநகரான பஸ்சைன் அதாவது வசாய், மும்பையின் பல்வேறு தீவுகளில் உள்ள தொலைதூர கிராமங்கள், போர்த்துகீசிய குடும்பங்களுக்கு நிர்வகிக்க வழங்கப்பட்டது. அவர்களை ஃபோர்ரோஸ் அதாவது வசடோர்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர் என்று சிட்டி க்ரோனிக்கரும் காக்கி ஹெரிடேஜ் அறக்கட்டளையின் நிறுவனருமான பாரத் கோதோஸ்கர் கூறினார்.
ஆங்கிலேயர்கள் மும்பையை ஆளத் தொடங்கியபோது, இந்தக் கருத்து தொடர்ந்தது. மேலும் பல கிராமங்கள் மராத்தி இந்துக்கள் மற்றும் கொங்கனி முஸ்லீம்கள் உட்பட பல்வேறு பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அபின் மற்றும் பருத்தி வணிகத்தில் அதன் செல்வத்தை ஈட்டிய நகரத்தின் பணக்கார சமூகம் பார்சி சமூகம் ஆக கருதப்பட்டது. அவர்கள் சல்செட் தீவில் உள்ள நிலத்தில் சிங்கத்தின் பங்கைப் பெற்றனர் என்று கோதோஸ்கர் மேலும் கூறினார்.
மும்பையில் அரசு அதிகாரிகளிடம் உள்ள நிலங்கள்:மும்பையில் பெரிய நிலங்களை வைத்திருக்கும் பல தனியார் நிறுவனங்களுடன், மும்பை போர்ட் டிரஸ்ட், நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன், மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசு, மத்திய இரயில்வே, மேற்கு ரயில்வே போன்ற பல அரசு நிறுவனங்களும் நகரத்தில் நிலங்களில் குறிப்பிடத்தக்க பகுதியை வைத்துள்ளன.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications