தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முக்கியமான தகவலை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மாநிலத்தின் நிதிநிலை மற்றும் கடன் சுமை ஏற்கனவே அதிகமாக இருக்கும் வேளையில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு உபரி வருமான கொண்ட மாநிலமாக இருந்து தற்போது வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக உள்ளது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிட என்ன காரணம்..?!
இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுக் கூட்டத்தில் மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மிக முக்கியமான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
1. எங்களின் அடிப்படை தத்துவத்தையும், குணத்தையும் நிரூபணம் செய்யும்
2. மக்களிடம் உண்மையான தகவலை வெளிப்படைத்தன்மை உடன் கொண்டுபோய்ச் சேர்க்கும் கடமை உள்ளது
3. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடைமையைச் செய்துள்ளோம்.
4. கடன் நிலை, செலவினம், முக்கியமான பொது நிறுவனங்களின் சூழ்நிலையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிதி நிலை
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது, இதன் பின்பு 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
10 ஆண்டுக் காலம்
2021-ல் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இதில் கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது மாநிலத்தின் நிதி நிலையை மோசமாக்கியுள்ளது.
அடிப்படை செலவுகளுக்குக் கடன்
பல வழிகளில் தமிழகத்தின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் அடிப்படை செலவுகளுக்குக் கூடக் கடன் வாங்கிச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கான வருமானம் இந்த 10 ஆண்டுகளில் 4-இல் ஒரு பங்கு குறைந்துவிட்டது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதிநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்
2006 - 2011 திமுக ஆட்சியில் வருவாய் உபரி இருந்தது.
2011 - 2016 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை எண்ணிப்பார்க்க முடியாது அளவு ஏற்பட்டுள்ளது.
2016 - 2021 அதிமுக ஆட்சியில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தற்போது மொத்த உற்பத்தியில் 8.7% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன் சுமை
இதனால் 2021 -22 இடைக்காலப் பட்ஜெட்டின் படி தமிழகத்தின் கடன் சுமை 5,70,189 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மின்துறை மற்றும் போக்குவரத்து துறையின் கடன் எச்சரிக்கை தரும் வகையில் உள்ளதாகவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்தின் கடன் சுமை
இந்தக் கடுமையான நிதிநிலையில், மாநிலத்தின் வருவாய்க் குறைந்தது மட்டும் அல்லாமல் கடன் சுமையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications