முதல்வர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் 10,000 கி.மீ. கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அவர் பேசியபோது 110 விதியின் கீழ் கூடுதலாக 10,000 கி.மீ. கிராமப்புற சாலைகள் ரூ.4000 கோடியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

2023 ஜனவரி 13 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் முதற்கட்டமாக ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளின் ரூ.4000 கோடியில் 10,000 கி.மீ. ஊரக சாலைகள் மேம்படுத்தப்பட்டது. இந்த 10,000 கி.மீ. சாலைகள் முதற்கட்டமாக கிராம ஊராட்சிகளில் மேம்படுத்தப்பட்டது. இதில் 8120 கி.மீ. சாலைகள் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளன.
425 மேம்பாலங்கள் மற்றும் 16,596 கி.மீ. சாலைகள் முதல்வர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு ஊரக அடிப்படை வசதிகள் மேம்பாட்டு நிதி, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.9,324.49 கோடி ஆகும். இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஆளுங்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது தொகுதியில் மேம்படுத்த வேண்டிய சாலைகளை அடையாளங்காணுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
திட்டம் குறித்து தங்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று எம்எல்ஏக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணியில் தேர்வு செய்ய உள்ள சாலைகள் பற்றி கூற வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications