பொதுவாக புத்தாண்டு என்றால் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் நியூ இயர் ஈவ்னிங் கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் ஈடுபடுவது உண்டு. அந்த வகையில், இன்று 2024-க்கு இறுதி நாள் ஆக உள்ளது. இந்த நாள் முடிவடைய இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது.
புதிதாக 2025ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்தியாவில் எப்போதுமே கலைகட்டும். அதேபோல் மக்கள் மனதை கவர்ந்த கோவாவுக்கு வருடந்தோறும் செல்வோர்கள் அதிகம். ஆனால், இந்த ஆண்டு நிலைமை அப்படியில்லை. வெறிச்சோடி கிடக்கிறது கோவா.

கோவா என்றாலே சந்தோஷங்கள், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் தான். புதிய வருடத்தை அங்கே தொடங்க எண்ணற்ற இளைஞர்களின் கனவாக இருக்கும். புத்தாண்டுக்கு முன்னதாக இந்தியர்கள், வெளிநாட்டினர் அங்கே படையெடுப்பார்கள். ஆனால் இந்த முறை இன்று வரையிலும் அங்கு கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கடைகள், நடைபாதைகள், பீச்கள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதற்கு என்ன காரணம்?
கோவாவில் உள்ள ஹோட்டல்கள், விமான டிக்கெட்டுகளில் அதிகரித்த கட்டணமும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கோவா செல்ல ஒருவர் சென்னையிலிருந்து புறப்பட்டால் விமான டிக்கெட் ஆனது குறைந்தபட்சமாக ரூ. 3690-லிருந்து தொடங்குகிறது. அத்துடன் அதிகபட்சமாக ரூ.11129 ஆக உள்ளது. அதேபோல், கோவையிலிருந்து கோவா செல்ல ரூ.5563 இருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது.
உதாரணமாக ஒருவர் சென்னையிலிருந்து கோவா சென்றுவர விமான டிக்கெட் மட்டும் ரூ.7690 ஆக உள்ளது. அத்துடன் அங்குள்ள ஹோட்டல் ரூம்கள் குறைந்தபட்சம் ரூ.1100 மேல் ஒரு இரவுக்கு வசூலிக்கப்படுகிறது. உணவு, அங்கு சுற்றிப்பார்க்கும் செலவுகள் உட்பட ஒருவருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15000 வரை செலவு ஆகிறது.
அதுவே டூர் பேக்கேஜ்களில் சென்னையிலிருந்து செல்ல 3 நாள் இரவிற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.18231 வசூலிக்கப்படுகிறது. இதில் விமான டிக்கெட், ஹோட்டல் ரூம், வெளியில் சுற்றிபார்ப்பது எல்லாம் அடங்கும், அதேபோல் இந்த பேக்கேஜ்களில் ஒவ்வொரு ஏஜன்சிகளிடமிருந்து மாற்றம் இருக்கும்.

இந்த நிலையில், கோவாவில் இந்த 2025 புத்தாண்டை கொண்டாட யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. இங்குள்ள ரெஸ்டாரண்ட்கள், பார்கள், ஹோட்டல்கள், கடைத்தெருக்கள் என எங்குமே கூட்டம் இல்லாமல் கோவா வெறிச்சோடி உள்ளது என தீபிகா நாராயண் பரத்வாஜ் என்ற எக்ஸ் தள பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதிக சுற்றுலா பயணிகள், அதிகரித்து வரும் செலவுகள், மோசமான உள்கட்டமைப்பு, தூய்மைப் பிரச்சினைகள், மோசடிகள், விற்பனையாளர்கள் ஆக்கிரமிப்பு , போதைப்பொருள் சீரழிவு, நெரிசலான கடற்கரைகள், பாதுகாப்பு குறைவு உள்ளிட்ட காரணங்கள் கோவா செல்ல மக்கள் பயத்தை அதிகரிக்கிறது. எனவே பயணிகள் கோவா செல்வதை தவிர்க்கின்றனர். இங்கு மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு குறைவான கவர்ச்சிகரமான அனுபவத்தை கொண்டுள்ளது. இதுவே மக்களுக்கு கோவா செல்வதற்கான ஆர்வத்தை குறைக்கிறது.
நமது அண்டை மாநிலமான பாண்டிச்சேரியை பொருத்தவரையில் அங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து காணப்படும். இங்குள்ள பீச்கள், ஹோட்டல்கள், பார்க்குகள் என ஏராளாமான சுற்றுலா தளங்களில் கூட்டம் இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விரைவில் கோவாவை போன்ற நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications