இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது . மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
ஏப்ரல் மாத நிலவரப் படி இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் மதிப்பு 43,60, 400 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் மார்ச் மாதம் மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீடுகளின் மொத்த மதிப்பு 42,06, 093 கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதம் இந்த மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் உள்நாட்டை சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் மொத்தம் 10.21 சதவீத பங்குகளை தங்களுக்கு சொந்தமானதாக மாற்றி வைத்திருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் எந்தெந்த நிறுவனங்களில் அதிக முதலீட்டை வைத்துள்ளன என பார்க்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அதிகமாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகளை தான் அதிகம் வாங்கி வைத்துள்ளன. இந்த வங்கியில் 1,60,02,67,745 பங்குகள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. இவற்றின் மதிப்பு 3,08,022 கோடி ரூபாய் ஆகும். அதாவது இந்த வங்கியின் மொத்த பங்கில் 20.91 சதவீதம் ஆகும்.
அடுத்ததாக ஐசிஐசிஐ வங்கியில் அதிகளவில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த வங்கியின் 1,72,80,02,883 பங்குகள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. இதன் மதிப்பு 2,46,561 கோடி ரூபாய் ஆகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 1,74,281.27 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கி வைத்துள்ளன. ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 1.17 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகள், ஆக்சிஸ் வங்கியில் 1.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், ஏர்டெல் நிறுவனத்தில் 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வசம் உள்ளன.
எல்&டி நிறுவனத்தில் 92,092.88 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. எஸ்பிஐ வங்கியில் 85,128.88 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், கோடக் மகேந்திரா வங்கியில் 77,771.51 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களால் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
PRIME Database, வெளியிட்டுள்ள தகவலில் ஏத்தர் எனர்ஜி, கேபிடல் இன்ஃபிரா டிரஸ்ட் ஆகியவற்றிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்ய தொடங்கி இருப்பது தெரிய வருகிறது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் வங்கிகளில் தான் அதிக முதலீடு செய்திருக்கின்றன. இவை அனைத்துமே லார்ஜ் கேப் நிறுவன பங்குகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications