சென்னை: ஹோம் கிரெடிட் இந்தியா (HCIN), இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் மாத வருமானம் மற்றும் மாத செலவுகள் குறித்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், நடுத்தர வர்க்கத்தினரின் மாத வருமானம் சுமார் ரூ. 33,000 என்றும், மாத செலவுகள் ரூ. 19000 என்றும் ஆய்வு கூறுகிறது.
யார் கீழ் நடுத்தர வர்க்கம்?: ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் ரூபாயாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் எனப்படுவர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி-என்சிஆர், மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புனே, லக்னோ, ஜெய்ப்பூர், போபால், பாட்னா, ராஞ்சி, சண்டிகர், டேராடூன், லூதியானா மற்றும் கொச்சி போன்ற 17 நகரங்களில் ஹோம் கிரெடிட் இந்தியா (HCIN), ஒரு ஆய்வை நடத்தியது. 2500 நபர்களைக் கொண்ட 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்களின் மாதாந்திர வருமானம் மற்றும் செலவு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வில் இந்த நகரங்களில் உள்ள நபர்களின் வருடாந்திர வருமானம் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் என்று கணக்கிடப்பட்டது.
ஆய்வு முடிவுகளின் படி ஹைதராபாத்தில் அதிகபட்சமாக, ஒரு தனி நபர் மாத வருமானமாக ரூ. 44,000 பெறுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல 2024 ஆம் ஆண்டில் தனிநபர் மாத வருமானம் மெட்ரோ நகரங்களில் ரூ. 35,000-ஆகவும், மெட்ரோ அல்லாத டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் ரூ. 32,000 என்றும் கூறப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டில் மெட்ரோ நகரங்களில் ரூ. 33,000-ஆகவும் டயர் 1 நகரங்களில் ரூ. 30,000 மற்றும் டயர் 2 நகரங்களில் ரூ. 27,000 ஆயிரம் ஆகவும் இருந்தது.
அதேபோல ஒரு குடும்பத்தின் செலவுகள் 6 சதவீத அதிகரிப்பை எட்டியுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களில் முதன்மை ஊதியம் பெறுபவர் (CWE) மொத்த வீட்டுச் செலவுகளில் 80 சதவீதத்திற்குப் பங்களிக்கிறார். அதே சமயம் மற்றவர்கள் 20 சதவீத பங்களிப்பாளர்களாக உள்ளனர். ஆய்வில் 42 சதவீத பெண்கள் அந்தந்த குடும்பங்களில் தலைமை ஊதியம் பெறாமல் குடும்ப செலவுகளை நிர்வகிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
அதேபோல சாமானிய கீழ் நடுத்தர வர்க்க இந்தியருக்கு, மளிகை சாமான்களின் செலவு 26 சதவீதமும், வாடகை செலவு 21 சதவீதம், மற்றும் பயண செலவு 19 சதவீதம், குழந்தைகளின் கல்விக்காக 15 சதவீதம், மருத்துவச் செலவுகள் 7 சதவீதம், மின்சார கட்டணம் 6 சதவீதம், சமையல் எரிவாயு 4 சதவீதமம் மற்றும் மொபைல் பில்கள் 2 சதவீதம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு நகரங்களிலும், அவர்களுக்கு விருப்பமான செலவினங்களைப் பொறுத்தவரை, நகரங்களுக்கு நகரம் மாறுபடுகின்றன. மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது உள்ளூர் பயணம் மற்றும் சுற்றுலாவிற்கு 59 சதவீதம், வெளியில் உணவு சாப்பிட 54 சதவீதம், திரைப்படம் பார்ப்பதற்கு 55 சதவீதத்துடன் சென்னை தனித்து நிற்கிறது.
சென்னையில் வாடகைக்கு செலவு செய்யப்படும் தொகையின் விகிதமும் சற்று அதிகம் தான். இது 29 சதவீதமாக இருக்கிறது. அதேபோல பெங்களூருவிலும், கொச்சியிலும் குழந்தைகளின் கல்விக்காக 23 சதவீத பணத்தை செலவிடுகின்றனர். டேராடூனில் 13 சதவீதம் மருத்துவச் செலவுகளுக்கு செலவு செய்யப்படுகிறது மற்றும் குழந்தைகளின் கல்வி செலவுக்காக 10 சதவீதம் செலவு செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications