இந்த 5 விஷயத்தை செய்யும்போது உஷாரா இருங்க! இல்லன்னா வருமான வரித்துறை நோட்டீஸ் வந்துடும்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இதற்காக வருமான வரித்துறை பல்வேறு விதிகளை நிர்ணயித்துள்ளது. இது போன்ற விதிகளுக்கு உட்படுவது அவசியம். வரி ஏய்ப்பு மற்றும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கும் சிலரை வரித்துறை உன்னிப்பாக கவனிக்கறது.

இன்றெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதையெல்லாம் வருமானத் துறை கவனிக்க போகிறதா? என்று மட்டும் தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். உங்களுடைய வங்கி பரிவர்த்தனை முதல்.. யுபிஐ பயன்பாடு வரை அனைத்தையும் வரித் துறை கண்காணிக்கிறது.

இந்த 5 விஷயத்தை செய்யும்போது உஷாரா இருங்க! இல்லன்னா வருமான வரித்துறை நோட்டீஸ் வந்துடும்!

பரிவர்த்தனை செய்யும் போது குறிப்பிட்ட வரம்பை மீறினால் உங்களுக்கு வருமானவரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வரலாம். தற்போது வரித்துறை மக்களின் வருமானத்தை கண்காணிக்க நவீன கருவிகளை பயன்படுத்துகிறது. உங்கள் வங்கி, முதலீடு தொடர்பான நிறுவனங்கள், சோத்து ஒப்பந்தங்கள், பயணங்கள் பணி புரியும் நிறுவனம் என பல தரப்பினரிடமிருந்தும் வரித்துறைக்கு தகவல்கள் சென்றடைகிறது.

இதில் ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால் உங்களுக்கு வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படலாம். அதோடு வரி அதிகாரிகள் உங்கள் வீட்டில் விசாரணை நடத்தலாம். கீழ்காணும் ஐந்து விஷயங்களை நீங்கள் செய்திருந்தால் கண்டிப்பாக நீங்கள் வரித் துறையிடம் சிக்கும் அபாயம் உண்டு.

சேமிப்பு கணக்கில் அதிக தொகையை வைத்திருப்பது: ஒரு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை டெபாசிட் செய்திருந்தால் வங்கி உங்களுடைய தகவலை வரித் துறைக்கு வழங்கும். பணம் வைத்திருந்தால், உடனே நீங்கள் வரி ஏய்ப்பு செய்து விட்டீர்கள் என்றெல்லாம் அர்த்தமல்ல. ஆனால் இவ்வளவு பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என்று கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். உங்களுடைய பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் அதற்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

பிக்சட் டெபாசிட்: இப்போதெல்லாம் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் அதிகரித்து விட்டன. எனவே மக்கள் அதில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர். அப்படி இருக்கையில் நீங்கள் 1 வருடத்தில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக பிக்சட் டெபாசிட் செய்தால் அதுவும் வரித்துறையின் பார்வையில் விழலாம். சரி பிரித்து பிரித்து பல வங்கிகளில் டெபாசிட் செய்தால் கணக்கு தெரியாது என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். மொத்த தொகை ரூ. 10 லட்சத்தை தாண்டினால்.. அதுவும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

பங்குகள் பத்திரங்களில் ரொக்க முதலீடு: பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் ரொக்கமாக ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேலாக முதலீடு செய்தாலும் வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். உடனடியாக நோட்டிஸ் வரவில்லை என்றாலும்.. உங்கள் வருமானத்திற்கும், முதலீட்டிற்கும் பெரிய வித்தியாசம் காணப்பட்டால் உடனடி விசாரணையும் நடத்தப்படலாம்.

கிரெடிட் கார்டு பில்லை ரொக்கமாக செலுத்துதல்: ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பில்லை ரொக்கமாக செலுத்தினாலும், வருமான வரித்துறை கண்காணிக்கும். இதை மீண்டும் மீண்டும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி எழலாம்.

ரூ. 30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்தை வாங்கும்போது அந்த தொகையின் மூலத்தை நீங்கள் சொல்ல வேண்டும். இந்த வரம்பு நகரங்களில் ரூ.50 லட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூ. 20 லட்சமாகவும் உள்ளது. சில மாநிலங்களில் இந்த வரம்பு மிகவும் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. ரொக்கமாக பணம் செலுத்தி பணம் எங்கிருந்து வந்தது என்பதை உங்களால் சொல்ல முடியவில்லை என்றால் வருமான வரித்துறை உங்களிடம் விசாரணை நடத்தலாம்.மேற்கண்ட 5 விஷயங்களை செய்யும் போது உங்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என்பதை சரியாக சொல்ல வேண்டும். அப்படி சொல்லிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+