மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025-ன் விவரங்களை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த மசோதா பிப்ரவரி 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தற்போதைய வரிச் சட்டங்களை எளிமைப்படுத்தி, அனைவருக்கும் எளிதாக விளக்கும் படியும், அதிகப்படியான மக்களை வருமான வரி வலையத்திற்குள் இணக்கும் வகையில் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதை இந்த விரிவான மசோதா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய Income Tax Bill 2025-ல் 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது இந்த மசோதா, வரி தொடர்பான பல்வேறு விதிகளை உள்ளடக்கியுள்ளது. இதன் அறிமுகம், தற்போதைய வருமான வரி முறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. இந்த நிலையில் இப்புதிய வருமான வரி மசோதாவில் சாமானிய மக்கள் டூ கோடீஸ்வரர் வரை கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயம்.
புதிய வரி விதிப்பு முறை
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி அடுக்குகளை மாற்றி அமைப்பது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் படி புதிய வருமான வரி முறையின் கீழ் செயல்பட உள்ள வரி பலகை விகிதங்கள் இதுதான்.
ரூ. 4,00,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும்.
ரூ. 4,00,001 முதல் ரூ. 8,00,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விகிக்கப்படும்.
ரூ. 8,00,001 முதல் ரூ. 12,00,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்.
ரூ. 12,00,001 முதல் ரூ. 16,00,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதம் 15% ஆக உயரும்.
ரூ. 16,00,001 முதல் ரூ. 20,00,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்.
ரூ. 20,00,001 முதல் ரூ. 24,00,000 வரை சம்பாதிப்பவர்கள் 25% வரி விதிக்கப்படும்.
இறுதியாக, ரூ. 24,00,000க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% என்ற அதிகபட்ச வரி விகிதம் பொருந்தும்.
ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்
புதிய வருமான வரி மசோதாவில் தனிநபரின் சம்பளக் கழிவுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தற்போதைய வரி விதிப்பின் கீழ், ஒரு ஊழியர்கள் ரூ. 50,000 தொகையை ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் கீழ் வருமான வரி விலக்கை க்ளைம் செய்யலாம்.
புதிய மசோதா, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 276(2) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பணியமர்த்திய நிறுவனம் அல்லது அமைப்பால் செலுத்தப்படும் வரி முழுமையாகக் வரி கழிப்புக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியம்
புதிய வருமான வரி மசோதா 2025-ல் மற்றொரு குறிப்பிடத்தக்க விதி ஓய்வூதிய மாற்றத்தைப் பற்றியது. மத்திய அரசின் சிவில் பென்ஷன் (Commutation) விதிகள் அல்லது பிற அரசு சேவைகள், குடிமை சேவைகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் பொருந்தும் இதே போன்ற திட்டங்களின் கீழ் ஓய்வூதிய தொகைக்கு முழுமையாகக் வரி கழிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
60 வருட வரி சட்டம்
இதன் மூலம் சாமானிய மக்கள் வாங்கும் சம்பளத்தில் எவ்விதமான புதிய தாக்கம் இல்லை, ஏற்கனவே இருக்கும் விதிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு தற்போது நடைமுறையில் இகுக்கும் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது, இப்புதிய மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக மாறும்.
கடந்த ஆறு தசாப்தங்களாக பல திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய வருமான வரி சட்டம் மிகவும் சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் மாறியுள்ளதாகவும், இதனைச் சரி செய்யும் வகையில், புதிய வருமான வரிச் சட்டத்தின் மூலம் வரி விதிப்பு முறையை எளிமையாக்கி, வரி செலுத்துவோருக்குத் தெளிவு மற்றும் இணக்கத்தை அதிகரிக்க மோடி 3.0 அரசு முயற்சிக்கிறது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications