சமீபகாலமாக வரி செலுத்தும் செயல்முறையை சீரமைக்கும் விதமாக வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி ஏய்ப்பு, பண மோசடி மற்றும் பிற நிதி முறைகேடுகளைத் தடுக்க சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் டெபாசிட் செய்வது மற்றும் பணம் எடுப்பதற்கு வருமான வரித்துறை வரம்புகளை நிர்ணயித்துள்ளது. ஒருவர் இந்த வரம்புகளை மீறினால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். அதோடு வரி அதிகாரிகள் உங்கள் வீட்டை ஆய்வு நடத்தவும் வழி வகுக்கலாம்.
இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்கு வருமானவரித் துறையின் விதிகள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

சேவிங்ஸ் அக்கவுண்டுகளில் டெபாசிட் செய்வதற்கான வரம்புகள் என்னென்ன?: உங்கள் சேமிப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு வரம்புகள் உள்ளது. தனிநபர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால் வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
கரண்ட் அக்கவுண்ட்களில் கேஷ் டெபாசிட் செய்வதற்கான வரம்புகள் என்னென்ன?: கரண்ட் அக்கவுண்ட்களைக் கொண்ட நபர்கள் குறிப்பாக பெரிய வணிகங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக அளவிலான பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு வெவ்வேறு வரம்புகள் பொருந்தும். கரண்ட் அக்கவுண்ட்களில் மொத்த வருடாந்திர டெபாசிட் வரம்பு ரூ. 50 லட்சம். ஆனால் உற்பத்தியாளர்கள், பெரிய விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சில கரண்ட் அக்கவுண்டுகளில் ரூ.1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை டெபாசிட் செய்யலாம்.
பெரிய அளவிலான டெபாசிட்களுக்கு கண்டிப்பாக உங்கள் பான் கார்டை வழங்க வேண்டும். அதாவது ஒரே நேரத்தில் ரூ. 50,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால் உங்கள் பான் கார்டு நம்பரை வங்கிக்கு வழங்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விபரங்களை வங்கிகள் முன்னரே பெற்று விடுகின்றன.
சரி டெபாசிட் செய்வதற்கு தான் இந்த வரம்புகள்.. பணம் எடுப்பதற்கு இல்லை என்று நினைத்து விடாதீர்கள்! பணம் எடுப்பதற்கும் வரம்புகள் உண்டு. வரி அதிகாரிகள் நீங்கள் பணம் எடுப்பதையும் கண்காணிக்கின்றனர். ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாத தனி நபர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுப்பதற்கு 2 சதவீத டிடிஎஸ்-ஸும், ரூ. 1 கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு 5% டிடிஎஸ்ஸும் பொருந்தும். வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 269-எஸ்டி இன் கீழ் ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் வேறொருவரிமிருந்து ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை பெற்றிருந்தாலும் அபராதம் விதிக்கப்படலாம்.
சிலர் தாங்கள் செய்யும் பரிவர்த்தனை வருமானவரித்துறைக்கு தெரியாது என்று எண்ணுகின்றனர். நமக்கு இரண்டு கண்கள் தான்.. ஆனால் ஐடி துறைக்கு 57 கண்கள் புரியவில்லையா? 57 வழிகளின் மூலம் உங்களுடைய தகவல்கள் வருமானவரித்துறையை சென்று விடுகிறது.
உங்களுடைய சம்பளம், வாடகை, டிவிடெண்ட், வருமான வரி ரீஃபண்ட், வட்டி வருமானம், சேமிப்பு கணக்குகளின் பரிவர்த்தனை, டெபாசிட் செய்வதன் விவரங்கள், நீங்கள் பெறும் பிஎப், பாத்திரங்களில் இருந்து உங்களுக்கு வரும் வருமானம், இன்சூரன்ஸ் கமிஷன், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள், நிலம் அல்லது கட்டிட விற்பனை, டெபிட் கார்டு பரிவர்த்தனைகள், இதர கட்டணங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் நீங்கள் வெளிநாட்டில் பயணம் செய்வது, டேர்ம் டெபாசிட் பெறுவது, கிரெடிட் டெபிட் கார்ட் பரிவர்த்தனைகள், நீங்கள் பெற்ற நன்கொடைகள் என அனைத்தையும் வருமானவரித்துறை கண்காணிக்கும். எனவே தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு.. சரியான முறையில் வரி செலுத்தி வருமானவரித்துறையின் சொல்லும் விதிகளுக்கு உட்படுவது நல்லது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications