சென்னை: வருமான வரி செலுத்தாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருகிறது.
பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான டிடிஎஸ் தொகையை அந்தந்த நிறுவனங்கள் பிடித்தம் செய்வது வழக்கமான நடைமுறை ஆகும். அந்தந்த நிறுவனங்களில் இருக்கும், சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்கும் பொறுப்பில் உள்ள அலுவலர்கள், அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து பிறகு பிடித்தம் செய்த தொகையை சம்பளம் பெறும் ஊழியர்களின் பெயரில் வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும். இந்த தொகையானது அந்த சம்பளம் பெறுபவரின் பெயரில் வருமான வரித்துறையினரால் ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்நிலையில் 15.2 கோடி மக்கள், பிடிஎஸ் செலுத்தாத லிஸ்டில் வருமானவரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிடிஎஸ் தொகை செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அதன் குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர், பல தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வரி கழிக்கப்பட்ட போதிலும் வருமான வரி தாக்கல் செய்ய அவர்கள் தவறியதாக குறிப்பிட்டுள்ளார். 2022 - 2023 ஆம் நிதியாண்டில் தோராயமாக 89 மில்லியன் வரி செலுத்துவோர் இருந்தனர். அவர்களில் 74 மில்லியன் மட்டுமே வருமான வரியை தாக்கல் செய்தனர். சுமார் 19.7 மில்லியன் தனி நபர்கள் டிடிஎஸ் செலுத்திய போதிலும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
வருமானவரி தாக்கல் செய்யாதவர்களில் 19.3 மில்லியன் தனி நபர்கள், 28,000 இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள், 1,21,000 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. மேலும் வருமான வரி தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் குறித்த இந்த நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பேச பல அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் 2023 - 2024 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வி துறையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரிக்கு செலுத்தாமல் இருப்பதை வருமானவரி துணையினர் கண்டறிந்துள்ளனர். இதை அடுத்து அங்கு சம்பளம் வழங்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களான 5,563 நபர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நோட்டீஸ்க்கு பிறகும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை செலுத்தாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. எனவே தக்க ஆவணங்களுடன் வருமான வரியை தாக்கல் செய்ய அந்தந்த ஊழியர்களிடம் பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வங்கிக் கணக்கில் பான் கார்டுகள் இணைக்கப்பட்ட 8000 முதல் 9000 நபர்கள், தங்களது வங்கி கணக்கில் அதிக பணப்பரிவர்த்தனைகளை செய்துள்ளனர் என்பது கண்டறியபட்டுள்ளது. மேலும் அவர்களது டேட்டாக்களையும் CBDT வைத்துள்ளது. இது போன்றவர்களும் வரி செலுத்த வேண்டி இருக்கும். மேலும் இதனை வேண்டுமென்றே மீரும் பட்சத்தில் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications