குருகிராமில் உள்ள ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை அதிகாரிகள் ட்ரூகாலர் அலுவலகங்கள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான வேறு சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அழைப்பாளர் ஐடி மற்றும் ஸ்பேம் தடுப்பு செயலியான ட்ரூகாலர் ஆனது இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. பணப் பரிமாற்ற விலை நிர்ணய விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. இதனால், ட்ரூகாலர் மீது வருமான வரித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம், ட்ரூகாலர் ஃபிராட் இன்சூரன்ஸ் என்ற புதிய வசதியை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இது பிரீமியம் சந்தாதாரர்கள் மோசடிக்கு ஆளானால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த இன்சூரன்ஸ் வசதிக்காக ட்ரூகாலர் சேவைகளை வழங்குவதற்காக ஹெச்டிஎஃப்சி இர்கோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
மோசடிகள் அதிகரித்துள்ளதை அடுத்து, ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவும் என்று ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அம்சம் தற்போது பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
ட்ரூகாலர் என்பது தொலைபேசி அழைப்பாளர்களை கண்டுபிடிப்பதற்கும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை தடுக்கவும், மோசடி செய்பவர்கள் மற்றும் ரோபோகாலர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவும் ஒரு ஸ்மார்ட்போன் ஆப் ஆகும். இது Android, iOS மற்றும் Wear OS ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அத்துடன் ட்ரூகாலர் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது
காலர் ஐடி: யார் அழைக்கிறார்கள், ஏன் அழைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து தகவல் கொடுக்கிறது.
ஸ்பேம் டிடெக்டர்: தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தானாகவே தடுக்கிறது
செய்தி அனுப்புதல்: அறியப்படாத, ஸ்பேம், மோசடி அல்லது டெலிமார்க்கெட்டிங் SMS தானாகவே அடையாளம் கண்டு தடுக்கிறது
ஸ்பேம் ரிப்போர்ட்: பயனர்கள் மற்றவர்களைப் பாதுகாக்க நிகழ்நேரத்தில் ஸ்பேம் கால் எஸ்எம்எஸ்களை புகாரளிக்கலாம். இது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தானாகத் தடுக்கவும்
ட்ரூகாலர் அசிஸ்டெண்ட்: AI-ஆல் இயங்கும் உதவி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்
தானியங்கி கால் ரெக்கார்டர்: உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை பதிவு செய்கிறது
ட்ரூகாலர் ஆனது அடிப்படை அழைப்பாளர் ஐடி மற்றும் ஸ்பேம் தடுப்புடன் கூடிய இலவச பதிப்பையும், மேம்பட்ட ஸ்பேம் தடுப்பு மற்றும் விளம்பரங்கள் இல்லாத பிரீமியம் பதிப்பையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications