ஒரே ஒரு பான் கார்டை வைத்து மெகா மோசடி.. வருமான வரி துறை ஷாக்..!! #HRA

சென்னை: வீட்டு வாடகை கொடுப்பனவுவிற்கு (HRA) வழங்கப்படும் வருமான வரி விலக்கில் பெரிய அளவில் முறைகேடு நடத்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சிலர் போலியாக, பான் (PAN) எண்களை பயன்படுத்தி வீட்டு வாடகை கொடுப்பனவு வரி விலக்கை (House Rent Allowance HRA) பெற்று ஏமாற்றி வருவதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

ஒரே ஒரு பான் கார்டை வைத்து மெகா மோசடி.. வருமான வரி துறை ஷாக்..!! #HRA

என்ன நடந்தது?: பான் அட்டை மூலம் முறைகேடாக பலர் HRA வரி விலக்கை க்ளைம் செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 முதல் 10,000 வழக்குகள் இப்படி வருமான வரித்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் ரூ. 10 லட்சத்திற்கு கூட வருமான வரி மோசடி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.

ஒரு குறிப்பிட்ட பான் எண்ணின் கீழ் சுமார் 1 கோடி ரூபாய் வரை வாடகை ரசீது பதிவு செய்யப்பட்டு இருந்ததை வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்ததும் விசாரணை செய்துள்ளனர். எப்படி ஒரே அட்டைக்கு கீழ் இவ்வளவு பேர் வாடகை செலுத்துகின்றனர் என்று சந்தேகம் அடைந்து அந்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர்.

ஆனால் அது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது, அந்த பரிவர்த்தனைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். அதோடு இல்லாமல்.. எனக்கு வாடகை எல்லாம் எதுவும் வரவில்லை. நீங்கள் சொல்வது போல 1 கோடி ரூபாய்க்கு எல்லாம் எனக்கு யாரும் வாடகை கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

மோசடியின் பின்னணி: இந்த கண்டுபிடிப்பு தான் வருமான வரித்துறையினரை மேலும் விசாரிக்க வைத்தது. பலர் தங்கள் சம்பளத்தில் இருந்து வரி விலக்கு பெற சற்றும் தொடர்பு இல்லாத பான் எண்களை தவறாகப் பயன்படுத்துவதை வருமான வரித்துறையினர் உறுதி செய்தனர். ஒருவர் வீட்டு வாடகைக்கு வருமான வரி சலுகை பெற வீட்டு ஓனரின் பான் எண் அவசியம்.

ஆனால் வாடகை வீட்டில் இல்லாதவர்கள் பொய்யாக ரேண்டமாக பான் எண் கொடுத்து வரி சலுகை பெறுவது தற்போது அதிகமாகி உள்ளது. அப்படித்தான் மேற்கண்ட விவகாரத்தில் வரிச் சலுகைகளைப் பெற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் ஒரே பொய்யான பான் எண்ணைப் பயன்படுத்தியது அம்பலம் ஆகி உள்ளது.

அதனடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவை போலியாக க்ளைம் செய்த ஊழியர்களைப் பிடிக்க, வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பான் வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பான் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவது எப்படி நடக்கும் என்பதை இந்த வழக்கு சுட்டிக் காட்டுகிறது. மற்றொரு சிக்கல் என்னவென்றால், டிடிஎஸ் (TDS tax deducted at source) ரூ. 50,000க்கு மேல் மாத வாடகைக்கு அல்லது ரூ. 6 லட்சத்துக்கும் மேலான வருடாந்திர கட்டணங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் பல பணியாளர்கள் வாடகைப் பணத்திற்கு வரி செலுத்தாமல் தவிர்த்து வருகின்றனர்.

புதிய தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி அமைப்புகளின் மூலம் பல நிதி பரிவர்த்தனைகள் PAN உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் எளிதாக போலி பான் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியும்.

பிடிபட்டால், மக்கள் பின்னர் வரி செலுத்த வேண்டியிருக்கும், மேலும் கடுமையான வழக்குகளில் அபராதம் செலுத்த வேண்டும். அல்லது வழக்கை எதிர்கொள்ளவும் கூடும். வாடகை செலுத்தும் போது ஒரு நில உரிமையாளர், பரிவர்த்தனை உண்மையானது என்பதை நிரூபிக்க பணத்திற்கு பதிலாக காசோலைகள் அல்லது மின்னணு பரிமாற்றங்களான UPI செயலிகளைப் பயன்படுத்துவது முக்கியமாக கருதப்படுகிறது.

வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) என்றால் என்ன?: அனைத்து சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை HRA பிரிவில் வழங்கப்படுகிறது. உங்கள் பே ஸ்லிப்பில் இதனை நீங்கள் காணலாம். இதில் நீங்கள் செலுத்தும் வாடகைக்கு வரி சலுகை பெறலாம்.

HRA க்கான வரிச் சலுகைகளைப் பெற, நீங்கள் சம்பளம் பெறும் தொழிலாளியாக இருக்க வேண்டும், வாடகை இடத்தில் வசிக்க வேண்டும், வாடகை செலுத்த வேண்டும். நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், இந்த நன்மையைப் பெற முடியாது. மேலும், நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வு செய்திருந்தால் மட்டுமே HRAக்கான வரிச் சலுகைகளைப் பெற முடியும்.

HRA க்கு வரி விலக்கு பெற, பணியாளர் தனது வீட்டு ஓனருக்கு வாடகை செலுத்தியதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இந்த ஆதாரம் வாடகை ரசீதுகள் அல்லது வாடகை ஒப்பந்தமாக இருக்கலாம். ஓனரின் பான் எண் அவசியம். முறையான வாடகை ஒப்பந்தம் இருப்பது முக்கியம். வாடகைத் தொகை, வாடகைதாரர் எவ்வளவு காலம் தங்குவார், மற்றும் வேறு ஏதேனும் விதிமுறைகள் போன்ற விவரங்கள் இதில் இருக்க வேண்டும். ஒரு ஊழியர் தனது சொந்த வீட்டில் வசிக்கிறார் என்றால், அவர் HRA க்கு வரி விலக்கு பெற முடியாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+