ஜூலை 31 ஆம் தேதி (இன்று) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய கடைசி நாள் அதாவது இலவசமாக ITR தாக்கல் செய்ய இதுதான் கடைசி நாள், காலை முதலே அதிகப்படியானோர் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் பணிகளை துவங்கியுள்ளனர், பார்ம் 16 பெற்று பல நாட்கள் ஆனாலும் பெரும்பாலான மக்கள் கடைசி நாளில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
ஜூலை 30 ஆம் தேதி வரையில் சுமார் 6 கோடி பேர் தங்களுடைய வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர், இதில் முக்கியமாக ஜூலை 30 ஆம் தேதி மாலை 6.30 மணி வரையிலான ஒரு நாளில் மட்டும் சுமார் 26.76 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் ஜூலை 30 ஆம் தேதி ஒரு நாளில் மட்டுமே சுமார் 1.30 கோடி பேர் தங்களுடைய வருமான வரி கணக்கில் லாக்இன் செய்துள்ளனர். வருமான வரி தளத்தை இன்போசிஸ் நிர்வாகம் செய்தும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே இத்தளத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது, பெரும்பாலானோர் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை தளத்தில் கடந்த 2 வருடமாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து நிலையில் இன்போசிஸ் நிறுவனம் அரசு தரப்பில் இருந்தும் சரி, மக்கள் மத்தியிலும் சரி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது மறக்க முடியாது. பல கட்ட பணிகள் வாயிலாக தற்போது ஒரு நாளுக்கு 1.30 கோடி பேர் லாக்இன் செய்யும் அளவுக்கும், ஒரே நாளில் 26.76 லட்சம் பேர் வரி அறிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கும் தளம் மேம்பட்டு உள்ளது.
ஐடிஆர் பைலிங் செய்வதில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க வருமான வரி செலுத்துவோருக்கு வரி தொடர்பான மற்றும் இதர சேவைகள் தொடர்பான விஷயங்களில் உதவ 24X7 மணிநேரமும் இயங்கும் கால் சப்போர்ட், லைவ் சாட், WebEx sessions மற்றும் சோஷியல் மீடியா வாயிலாக உதவுகிறோம்.
மேலும் ஒர் நாளில் 26.76 லட்சம் பேர் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்தது புதிய மைல்கல் எனவும் வருமான வரித்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications