சென்னை: வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு ரீபண்ட் தொகைக்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கலாம். வருமான வரித் துறை ஆகஸ்ட் 22, 2024 அன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மாத சம்பளக்காரர்கள் வெரிஃபை செய்து சமர்ப்பிக்கப்பட்டு உள்ள மொத்த வருமான வரித் தாக்கல் (ITRs) அறிக்கையில் 73.71% மட்டுமே செயலாக்கம் செய்துள்ளது.
வருமான வரி துறையின் ஈபைலிங் போர்ட்டலில் தரவுகளின்படி, 7,13,00,901 ITRகள் சரிபார்க்கப்பட்டு, 5,25,53,097 ITRகள் செயலாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 26.29% அல்லது 1,87,47,804 ITRகள் இன்னும் செயலாக்கப்பட வேண்டியுள்ளது.

நீங்கள் இந்த 26% குழுவில் இருந்தால், உங்கள் ITR ஏன் இன்னும் செயலாக்கப்படாததற்கான காரணம் என்ன என்பதை யோசித்துப் புலம்பிக்கொண்டு இருக்கலாம், ஏனெனில் பலருக்கு தற்போது வருமான வரி தொடர்பான நோட்டீஸ் வந்துக்கொண்டு இருக்கிறது.
இதே வேளையில் வருமான வரித்துறை வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான தொழில்நுட்பத்தை ITR சரிபார்ப்பில் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாகவும் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
வருமான வரித் துறையின் CPC அமைப்பு, ITR அறிக்கைகளை ஆட்டோமேட்டிக் முறையில் டிஜிட்டலாக பிராசஸ் செய்வது அனைவருக்கும் தெரியும். இந்த சரிபார்ப்பு முறையை மேம்படுத்தவும், பல முறைகேடுகளைத் தடுக்கவும் பல ஏஐ, மெஷின் லேர்னிங் உட்பட பல புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டிஜிட்டல்முறைகேடுகள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் மனித தலையீடு பல இடத்தில் அவசியமானதாக இருக்கும்.
ஆனால், 2013 இல் ஐடிஆர் படிவங்களை பிராசஸ் செய்ய வருமான வரித்துறை 93 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில், 2023 இல் 11 நாட்களாகக் குறைந்து வருவதை ஒப்பிடும்போது, 20 நாளில் 70 சதவீத ஐடிஆர்களை பிராசஸ் செய்யப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது தான். எனவே அடுத்த சில நாட்களில் அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வரித் துறை மீதமுள்ள ITRகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் ITR சோதனைக்காக எடுக்கப்பட்டதா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், 7.1 கோடியில் சுமார் 5.2 கோடி ITRகள் ஏற்கனவே செயலாக்கப்பட்டுள்ளதால், இது கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. வருமான வரி அறிக்கை தாக்கலில் ஏதேனும் தவறு செய்து நோட்டீஸ் பெற்றாலும் அச்சப்படத் தேவையில்லை. முறையான விளக்கத்தைக் கொடுத்து சரிசெய்துக்கொள்ள நடைமுறைகள் உள்ளது.


Click it and Unblock the Notifications