இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர்-ன் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமாக விளங்கும் புரவங்கரா நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் அக்டோபர் 4 புதன்கிழமை வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். புரவங்கரா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பெங்களூர் நகரின் மிகவும் பிரபலமான, முக்கியமாக கார்பரேட் மற்றும் டெக் ஊழியர்களின் விருப்பமான ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருக்கும் புரவங்கரா வருமான வரித்துறை சோதனை பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த சோதனையை ANI உறுதி செய்து இத்தகவலை டிவீட் செய்துள்ளது.

புரவங்கரா நிறுவனத்திற்கு சொந்தமான பெங்களூர், ஹைதரபாத், மும்பை நகரங்களில் இருக்கும் அலுவலகங்கள், கட்டிடங்கள், உயர் அதிகாரிகளின் வீடுகள் உட்பட சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை வாயிலாக நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் -2.73 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான புரவங்கரா வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருமான வரித்துறை இந்த சோதனை நடத்தியுள்ளது. புரவங்கரா சென்னை, கோயம்புத்தூரிலும் அலுவலகம், வர்த்தகம் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. புரவங்கரா நிறுவனம் வீட்டு மனைகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் கட்டுமானம், விற்பனையில் ஈடுப்பட்டு உள்ளது.
புரவங்கரா ப்ரீமியம் வீட்டு மனை பிரிவில் உள்ளது, கடந்த சில வருடங்களாக அதிகப்படியான நிலத்தை வாங்கியுள்ளது, ஆனால் இந்நிறுவனத்தின் விற்பனை பில்களில் எதிரொலிக்கவில்லை. மேலும் வருமான வரித்துறையின் டேட்டா அனலிட்டிக்கல் சாப்ட்வேரில் அதிகப்படியான வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புரவங்கரா பெங்களூரை தாண்டி மும்பை, புனே ஆகிய பகுதிகளில் அதிகப்படியான நிலங்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் புரவங்கரா தனது வர்த்தகத்தை தென்னிந்திய பகுதிகளை தாண்டி விரிவாக்கம் செய்ய துவங்கியுள்ளது.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications