சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஓப்போ, ஜியோமி. ரைசிங் ஸ்டார், டிக்சான், ரெட்மி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களின், இந்திய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மத்தியில் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஓப்போ, ஒன்பிளஸ், ஜியோமி நிறுவனங்களுக்கான டெல்லி என்சிஆர், கர்நாடகா உள்பட 15 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகின்றது.
இந்த சோதனையானது மறைமுக வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட சில காரணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
தொடர் சோதனை
இந்த சோதனை நடவடிக்கையானது செவ்வாய்க்கிழமையிலிருந்து ஒப்போவின் அனைத்து மாநிலங்களில் உள்ள விநியோக கூட்டாளிகளின் அலுவலகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது. வெவ்வேறு இயக்குனரகங்கள் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை
மேலும் இது குறித்து வெளியான எக்னாமிக் டைம்ஸ் பதிவில் அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனையானது, இந்த நாள் முடியும் வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே மற்றொரு ஆங்கில நாளிதழ் இந்த சோதனையானது மூன்று நாட்கள் நடைபெறலாம் என கூறுகின்றது.
நூற்றுக்கணக்கான கோடி அபராதம்
இந்த சோதனையானது சமீபத்தில் அமலாக்க இயக்குனரகம் (ED) நடத்திய சோதனைக்கு பிறகு நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தினை நன்கு அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஹைத்ராபாத்தில் ஓப்போவின் சீனா விநியோகருக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் அபராதம் விதிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.
சென்னையில் சோதனை
இதே சென்னையில் கொட்டிவாக்கம் நேரு நகரில் உள்ள ஒப்போ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர ஒப்போ விற்பனையகங்களில் சில இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒப்போ நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகின்றது.
ரெட்மி அலுவலகத்திலும் சோதனை
சென்னை ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ரெட்மி அலுவலகத்திலும் சேதனை நடந்து வருவதாக தெரிகின்றது.இந்த வளாகத்திற்குள் யாரும் புதியதாக நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதியில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications