இன்னும் 10 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள ITR சரிபார்ப்பை செஞ்சிடுங்க.. இல்லன்னா ரீபண்ட் வராது!

ஜூலை 31-ஆம் தேதி வரை சுமார் 7.28 கோடிக்கு மேற்பட்ட வருமான வரி தாக்கல் (ITR) செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 5 கோடி பேர் ஜூலை 26-ஆம் தேதிக்குள் தங்களது ITR-ஐ தாக்கல் செய்து விட்டனர். வருமான வரித் துறை ஜூலை 27 மற்றும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிட்ட தரவுகளின்படி இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, ஜூலை இறுதி நாட்களில் அதாவது ஜூலை 26-ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட 2.28 கோடி ITR-களுக்கு, தங்கள் ITR-ஐ சரிபார்ப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 30 வரை உள்ளது. எனவே, நீங்கள் இந்த தேதிகளுக்கு இடையில் உங்கள் ITRஐ சமர்ப்பித்து இன்னும் சரிபார்க்கவில்லை என்றால், தாமதமாக ITR தாக்கல் செய்து கொள்ளலாம்.

வருமான வரி விதிகளின்படி இ-வெரிஃபிகேஷன் செயல்முறைக்கு ITR தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாள் வழங்கப்படுகிறது. வருமான வரித் துறையின்படி, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த ITR-களின் எண்ணிக்கை 7,41,37,596 ஆகும்.

 இன்னும் 10 நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள ITR சரிபார்ப்பை செஞ்சிடுங்க.. இல்லன்னா ரீபண்ட் வராது!

ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்று மாலை 6 மணி வரை 7,09,89,014 (சுமார் 7.09 கோடி) ITR-கள் சரிபார்க்கப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன. அப்படியானால் 7,41,37,596 - 7,09,89,014 = 382,48,58,48 ITR-கள் இன்னும் சரிபார்க்கப்படாமல் உள்ளன. ஆக இன்னும் 32 லட்சம் ITR-கள் சரிபார்க்கப்படவில்லை.

ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஐடிஆரைத் தாக்கல் செய்யத் தவறிவிட்டாலோ அல்லது ஜூலை 31-க்குள் ஐடிஆரைத் தாக்கல் செய்திருந்தாலோ தாமதமாக ஐடிஆரை நீங்கள் தாக்கல் செய்யலாம். ஆனால் 30 நாள் காலக்கெடு முடிவதற்குள் அதைச் சரிபார்க்க வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் ITR-ஐ தாக்கல் செய்திருந்தால், 30-நாள் காலக்கெடு முடிவதற்குள் சரிபார்க்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு வருமான வரி ரீபண்ட் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

ITR-ஐ சரி பார்ப்பது ப்ராசசிங் செயல்முறைக்கும் வருமானவரி ரீபண்ட் பெறுவதற்கும் முக்கியமான ஒன்று. இந்த 30 நாள் காலக்கெடுவுக்குள் ITR சரிபார்க்கப்படாவிட்டால், அது செல்லாததாகக் கருதப்படுகிறது. இதன் பொருள் இந்த ITR-களுடன் தொடர்புடைய எந்தவொரு வரித் திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படாது. மேலும் வரி செலுத்துவோர் ஐடிஆரை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ட்விங்கிள் ஜெயின்.

ஜூலை 26-ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்த 2.28 கோடி நபர்கள் இன்னும் ஐடிஆர்-ஐ சரிபார்க்கவில்லை. இன்னும் சிலர் தங்களுக்கு வருமான வரி ரீபண்ட் வராதது குறித்து குழப்பத்தில் உள்ளனர். எனவே இது போன்ற நபர்களுக்கு திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்ய இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+