இந்தியாவில் வழக்கமாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி நாளாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இந்திய வருமான வரித்துறை வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்த முறை சம்பளதாரர்களுக்கு கூடுதலாக 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்னும் 13 நாட்களே இருக்கின்றன, இறுதி தேதி நெருங்க நெருங்க வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பதால் முடிந்த அளவு முன்கூட்டியே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்து விடுவது நல்லது .

இந்திய வருமான வரித்துறை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததால் அதனை அப்டேட் செய்வதற்காக சற்றே கால அவகாசம் எடுத்துக் கொண்டது. இதன் காரணமாகத்தான் இந்த ஆண்டு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான இறுதி தேதி என்பது ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த சூழலில் பலரும் வருமான வரி கணக்கு இணையதளம் முடங்குவதாகவும் ரீஃபண்டு கணக்குகள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை தவறாக காட்டப்படுவதாகவும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிளியர் டேக்ஸ் தளத்தின் அவினாஷ் அளித்துள்ள பேட்டியில் தற்போது வரை வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிப்பதாக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவே சம்பளதாரர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களுடைய கணக்கினை தாக்கல் செய்வதை உறுதி கொள்வது நல்லது என கூறியிருக்கிறார்.
ஜூன் மாதமே ஐடிஆர் 1 படிவத்தை அரசு வெளியிட்டு விட்டது எனவே வருமானவரி கணக்கினை தாக்கல் செய்பவர்களுக்கு வழக்கத்தை விட தற்போது 45 நாட்கள் கூடுதலாக கிடைத்திருக்கிறது என்பதால் தேதி நீட்டிப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என தெரிவித்திருக்கிறார். ஐடிஆர் 2 மற்றும் 3 ஆகிய படிவங்கள் தாமதமாக வெளியிடப்பட்டாலும் கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த படிவங்கள் வாயிலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது உயர்ந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
பெரும்பாலான சம்பளதாரர்களும் நிறுவனங்களும் முன்கூட்டியே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதில் தீவிரமாக இருப்பதாக கூறும் ஐடிஆர் தாக்கலின் வாராந்திர விகிதம் என்பது 150 சதவீதமாக அதிகரித்துள்ளது என்கிறார். கண்டிப்பாக வருமான வரி கணக்கு செய்யும் தேதி நீட்டிக்கப்படாது என்பதால் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்து விடுவது மூலம் அபராதங்களை செலுத்தாமல் தவிர்க்கலாம் என கூறுகிறார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications