இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இறுதி தேதி முடிந்துவிட்டது. வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி தான் முதலில் கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் வருமானவரித்துறை கூடுதலாக ஒரு நாள் அவகாசம் வழங்கி செப்டம்பர் 16ஆம் தேதி வரை மக்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது.
வருமானவரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு முடிந்து விட்டது கோடிக்கணக்கானவர்கள் தங்களுடைய கணக்கினை தாக்கல் செய்துவிட்டார்கள் தற்போது பெரும்பாலான நபர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஒரு கேள்வி தனக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை எப்பொழுது கிடைக்கும் என்பதுதான் . உங்கள் பெயரில் பிடிக்கப்பட்ட டிடிஎஸ் தொகை உள்ளிட்டவற்றை ரீஃபண்ட் முறையில் தான் நீங்கள் பெற முடியும்.

பொதுவாக வருமானவரி கணக்கினை தாக்கல் செய்த சில நாட்களிலேயே அந்த நபரின் வங்கி கணக்கில் ரீஃபண்ட் வந்துவிடும். சிலருக்கு அதே நாளில் கூட அந்த தொகையானது ரீஃபண்ட் ஆகிவிடும். உங்களுக்கு வர வேண்டிய தொகை சிறிய அளவிலான தொகை என்றால் விரைவில் உங்களுக்கு வந்து சேரும் சற்றே அதிகமான தொகை என்றால் வருமானவரித்துறை அதிகாரிகள் கவனமாக உங்களுடைய கணக்கினை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகுதான் ரீஃபண்ட் பிராசஸ் செய்ய தொடங்குவார்கள்.
சராசரியாக பார்க்கும்போது நீங்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்த நான்கிலிருந்து ஐந்து வார காலத்திற்குள் உங்களுக்கு வரவேண்டிய பணமானது அக்கவுண்டில் கிரெடிட் ஆகிவிட வேண்டும். சிறிய அளவிலான தொகையை வேகமாக பிராசஸ் செய்து விடுவார்கள் கொஞ்சம் அதிகமான தொகை உங்களுக்கு ரீஃபண்ட் வரவேண்டும் என்றால் சில நாட்கள் கூடுதலாக தேவைப்படும்.
உங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கலில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறது என்றாலும் அதிகாரிகள் அதனை முறையாக ஆய்வு செய்த பின்னர் தான் உங்களுக்கான ரீஃபண்ட் ப்ராசஸ் செய்ய தொடங்குவார்கள் . இந்த ஆண்டு வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போதே பலரும் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததாக கூறினர் . எனவே வழக்கத்தை விட சற்றே தாமதமாவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு சிலர் தங்களுக்கான மூலதன ஆதாயத்தை சரியாக குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள் அல்லது வருமான வரி கணக்கு தாக்கலில் ஏதேனும் பிழை நடந்திருக்கலாம் . இதுபோன்ற சமயங்களில் அதிகாரிகள் ஒன்றுக்கு இரண்டு முறை உங்களுடைய தகவல்களை கிராஸ் செக் செய்து அதன் பின்னர் தான் ரீஃபண்டுக்கான நடைமுறையை தொடங்குவார்கள்.
ஒரு வேளை உங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கலில் ஏதேனும் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உங்களுக்கு முறைப்படி அது தொடர்பாக தகவல் அளிக்கப்படும் . நீங்கள் மீண்டும் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும் அல்லது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும் . இந்த நடைமுறைகள் முடிந்த அடுத்த ஒரு வார காலத்திற்குள் உங்களுக்கான பணம் வந்துவிடும்.
ஒருவேளை உங்களுக்கான ரீஃபண்ட் தொகையை வருமானவரித்துறை தாமதமாக வழங்குகிறது என்றால் ஓராண்டுக்கு 6% சதவீதம் வட்டி என்ற அளவில் கணக்கிட்டு அந்த வட்டி தொகையும் உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் ரீஃபண்ட் வரவில்லையே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம் ஏனெனில் தாமதமாக வந்தாலும் வட்டி தொகையோடு உங்களை வந்து சேரும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications