வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தேதி நீட்டிப்பு இல்லை: ஐடி அதிகாரிகள் திட்டவட்டம்

சென்னை: வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். இதனால் சம்பளதாரர்கள் பலரும் அவசர அவசரமாக தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்து வருகின்றனர்.

வருமான வரி கணக்கு : வழக்கமாக இந்தியாவில் ஜூலை 30ஆம் தேதி வரை வரை தான் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்தது. வழக்கத்தை விட சம்பளதாரர்களுக்கு இந்த முறை 45 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தேதி நீட்டிப்பு இல்லை: ஐடி அதிகாரிகள் திட்டவட்டம்

இன்று கடைசி நாள்: தொடக்கம் முதலே வருமான வரித்துறை சார்பில் மக்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடைசி நாளான செப்டம்பர் 15ஆம் தேதியும் வந்து விட்டது.

தேதி நீட்டிப்பு இல்லை: இதற்கிடையே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள வருமான வரித்துறை செப்டம்பர் 15ஆம் தேதி தான் ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி நாள், இதற்கான தேதி எதையும் நாங்கள் நீட்டிக்கவில்லை, போலி செய்திகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் உடனடியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள் என எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்துள்ளது.

வருமான வரி வரம்பு: இந்தியாவில் இரண்டு முறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். ஒன்று பழைய வரி கணக்கு நடைமுறை மற்றொன்று புதிய வரி கணக்கு நடைமுறை . பழைய வரி கணக்கு நடைமுறையின் படி பார்த்தால் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் கொண்டவர்கள் கட்டாயம் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல புதிய வரிமுறையின்படி பார்த்தால் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் அனைவருமே வருமானவரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும்.

யாருக்கெல்லாம் கட்டாயம்: சில சமயங்களில் வருமான வரி வரம்பிற்குள் இல்லாதவர்களும் கூட தங்களுடைய வரிக் கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளில் 1 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தால் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வது கட்டாயம் . உங்களுடைய வீட்டு மின்சார கட்டணம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த ஒருவருக்கோ வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு நீங்கள் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவு செய்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.வெளிநாட்டு சொத்துகளில் இருந்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றாலும் கட்டாயம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும்.

அபராதம் உண்டா: செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று கடைசி நாளில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்கள் இதன்பின் என்ன செய்ய வேண்டும் என்று சந்தேகம் எழலாம். வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்று இந்த தேதிக்குள் அதனை செய்ய முடியாதவர்கள் நாளையும் கணக்கு தாக்கல் செய்யலாம் ஆனால் அதற்கு அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் .

எவ்வளவு அபராதம்: வருமான வரி சட்டத்தின்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்ட நபர் தாமதமாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும்போது ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். இதுவே ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட நபர் என்றால் 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

என்னென்ன முக்கியம்: வருமான வரி கணக்கு செய்பவர்கள் படிவம் 16 , பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் ஆண்டு தகவல் அறிக்கை எனப்படும் ஏஐஎஸ் கொண்டு உங்களுடைய அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் சரி பார்த்து எளிதாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம் . வருமானவரி கணக்கினை தாக்கல் செய்து முடித்தவுடன் e verify முறையில் உங்களுடைய கணக்கினை ஆதார் ஓடிபி அல்லது நெட் பேங்கிங் கொண்டு வெரிஃபை செய்தால் மட்டுமே உங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் என்பது முழுமை பெறும். தற்போதைக்கு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படுவதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+