வரி செலுத்தும் செயல்முறையை சீரமைக்கும் விதமாக வருமான வரித்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரி செலுத்துவதை இன்னும் எளிதாக்கும் வகையில் புதிய ஈ-பே வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிஜிட்டல் கட்டண வசதியின் மூலம் வரி செலுத்தும் நபர்கள் எளிதில் வருமான வரியை செலுத்தலாம். அதே சமயத்தில் இது மிகவும் வேகமான செயல்முறையாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நிதியாண்டும் லட்சக்கணக்கான சம்பளம் பெறும் தனிநபர்கள், சுய தொழில் செய்பவர்கள், வணிக உரிமையாளர்கள் வரி செலுத்தி வருகின்றனர். இது போன்ற நபர்கள் கடைசி நேரத்தில் வரி செலுத்தும் போது ஏற்படும் பிரச்சனையை தவிர்ப்பதற்கு இந்த ஈ-பே கட்டண முறை பெரிதும் உதவும். காலக்கெடுவை மீறி வரி செலுத்தும் பட்சத்தில் அதற்கு அபராதம் மற்றும் வட்டி அகிய இரண்டும் சேர்த்து செலுத்த வேண்டி வரலாம்.

எனவே இந்த ஈ-பே கட்டண முறையைப் பயன்படுத்தி எளிதில் வரி செலுத்த முடியும். 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 31, 2025. இந்த புதிய கட்டண முறையின் மூலம் கட்டணம் செலுத்தும் செயல்முறை முன்பை விட வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வருமானவரி துறையின் ஈ-பே கட்டணம் முறையின் முக்கிய அம்சம் என்ன?: இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியாகும். இந்த ஈ-பே கட்டணம் முறை வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் வசதியின் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலமாக பாதுகாப்பாக செலுத்த முடியும். நெட் பேங்கிங், டெபிட் கார்ட் போன்ற கட்டண முறைகளை அதற்கு தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ஈ-பே அமைப்பின் முக்கியமான நன்மை என்னவென்றால் உடனடியாக பணம் செலுத்தியவுடன் உறுதிப்படுத்தல் குறித்த செய்தியைப் பெறலாம். அதோடு பயனருக்கு வரி செலுத்தும் போது தொந்தரவு இல்லாத அனுபவத்தையும் வழங்கும். மேற்படி கட்டணப் பிழைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைவு.
வரி செலுத்துவதற்கு e-Pay அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலைப் பார்வையிடுங்கள்.
ஸ்டெப் 2: கண்டிப்பாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தான் நுழைந்திருக்கிறீர்களா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பான் கார்டு, பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா கோட் ஆகியவற்றைப் பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 3: பின்னர் மொபைல் நம்பர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டும். ஓடிபி சரிபார்ப்புக்கு உங்கள் மொபைல் நம்பரை சமர்ப்பித்தவுடன், 6 இலக்க ஓடிபி கிடைக்கும். சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க ஓடிபி-ஐ வழங்குங்கள்.
ஸ்டெப் 4: வரி வகை என்ன என்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டு பேமெண்ட் முறையைத் தேர்வு செய்யுங்கள். உதாரணமாக நெட் பேங்கிங், டெபிட் கார்டு, NEFT/RTGS போன்ற கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கலாம். எல்லா விவரங்களையும் வழங்கியவுடன் "பே நவ்" என்பதைக் கிளிக் செய்து பரிவர்த்தனையை முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications