ஒழுங்கான முறையில் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக வருமானவரித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி செலுத்தப்படாத சொத்துக்கள், பணம், தங்கம், நகை அல்லது மதிப்புமிக்க பொருட்களை வைத்திருப்பதாக சந்தேகித்தால் வருமானவரித்துறை உங்களுடைய சமூக ஊடக கணக்குகள், தனிப்பட்ட மெயில் விவரங்கள், வங்கி கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள் மற்றும் சிலவற்றை சட்டப்பூர்வமாக அணுகும் அதிகாரத்தை பெறவுள்ளது.
இந்த நடைமுறை 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போதுள்ள வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 132-இன் கீழ் ஒரு தனி நபரிடம் வெளியிடப்படாத வருமானம் சொத்து மற்றும் ஆவணங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்தால், உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் சோதனைகளை நடத்தி சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்ய சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போதைய சட்டங்களின் கீழ் இது போன்ற நடைமுறை இருந்து வருகிறது. ஒரு வேலை சாவிகள் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் வெளியிடப்படாத சொத்துக்கள் அல்லது கணக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகித்தால் வருமானவரித்துறை அதிகாரிகள் எந்த ஒரு வீட்டின் கதவு, பெட்டி அல்லது லாக்கரின் பூட்டை உடைத்து சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்.
வரி எய்ப்பு செய்தல், சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தல் மற்றும் பிற நிதி முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதால், இதைத் தடுக்கும் பொருட்டு 2026 முதல் 2027-ஆம் நிதி ஆண்டில் தனிநபர்களின் மெயில் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வருமானவரித்துறை அணுகவுள்ளது. நீங்கள் வேண்டுமென்றே வரியெப்பு செய்வதாக சந்தேகப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் உங்கள் லேப்டாப் செட்டிங், மெயில் விவரங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை சட்டபூர்வமாகவே பார்வையிடுவார்கள்.
எவற்றையெல்லாம் வருமான வரித்துறையினர் சோதனை செய்வார்கள்?: இமெயில் சர்வர்கள், சோசியல் மீடியா கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள், வங்கி கணக்குகள், எந்த ஒரு சொத்தின் விவரங்களை கொண்டிருக்கும் இணையதளங்கள், கிளவுட் சர்வர்கள், டிஜிட்டல் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை வருமானவரித்துறையினர் சோதனையிடலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் யார்?: வருமானவரித்துறையின் ஜாயின்ட் டைரக்டர், அடிஷ்னல் டைரக்டர், ஜாயிண்ட் கமிஷ்னர், அடிஷனல் கமிஷனர், அசிஸ்டன்ட் டைரக்டர், டெபுடி டைரக்டர், அசிஸ்டன்ட் கமிஷனர், டெபுடி கமிஷனர், இன்கம் டேக்ஸ் ஆபிஸர், டேக்ஸ் ரெகவரி ஆபிசர் ஆகியோர் இந்த சோதனையை நடத்தலாம். பலர் வருமானவரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் சிலர் பாதுகாப்பு குறித்த கவலைகளை கேள்வி எழுப்பியுள்ளனர். வரி செலுத்தும் கடமையை சரிவர செய்தால் இது போன்ற சோதனைகளில் சிக்காமல் இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications