இந்தியா முழுவதும் மூன்லைட்டிங் குறித்துப் பெரிய அளவில் விவாதம் நடந்து வரும் நிலையில், ஐடி துறை நிறுவனங்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடு நிலவுகிறது.
இன்போசிஸ், டெக் மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் மூன்லைட்டிங் அதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து கொண்ட மற்றொரு நிறுவனத்தில் ப்ரீலான்ஸ் முறையில் பணியாற்ற அனுமதி அளித்தாலும், டிசிஸ், விப்ரோ ஆகியவை கடுமையாக எதிர்த்து வருகிறது.
மூன்லைட்டிங் குறித்த பிரச்சனை ஐடி துறையில் மட்டும் அல்லாமல் பெரும்பாலான துறையில் உள்ளது, இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்-கள் மூன்லைட்டிங் செய்பவரை எச்சரித்துள்ளனர்.
மூன்லைட்டிங்
மூன்லைட்டிங் என்பது ஒரு நிறுவனத்தில் முழு நேரமாகப் பணியாற்றி வரும்போதே, மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேரமாகவோ, ஒப்பந்த ஊழியராகவோ அல்லது ப்ரிலான்ஸ் முறையில் கூடுதல் வருமானத்திற்காகப் பணியாற்றுவது. இதை இந்திய நிறுவனங்கள் திரோகமாவும், நாணயமற்ற செயலாகவும் பார்க்கிறது.
மாறுபட்ட கருத்து
மூன்லைட்டிங் குறித்து நிறுவனங்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் வருமான வரி அதிகாரிகள் மற்றும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் வல்லுனர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது, மூன்லைட்டிங் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானத்திற்கு வரி விதிப்புகள் உள்ளது, அதை விட முக்கியமாக வருமான வரி அறிக்கையில் இந்த வருமானத்தைக் கட்டாயம் பதிவிட வேண்டும் இல்லையெனில் பெரும் பிரச்சனை உருவாகும் என எச்சரித்துள்ளனர்.
30000 ரூபாய்க்கு மேல்
ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ 30000 ரூபாய்க்கு மேல் ஒப்பந்தப் பணி அல்லது professional fee ஆகச் செலுத்தும் போது அதற்குக் கட்டாயம் TDS வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதேபோல் வருமான விரி பிரிவு 194C-ன் கீழ் ஒரு நிதியாண்டில் ஒரே நபருக்கு மூன்லைட்டிங் மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் டிடிஎஸ் கட்டாயம் விதிக்கப்படும்.
வருமான வரி கணக்கு
மேலும் இந்த வருமானத்தைப் பெறுபவர் தனது வருமான வரிக் கணக்கில் அத்தகைய வருமானத்தைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் மற்றும் பொருந்தக்கூடிய வரி விகிதத்தைச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி
மூன்லைட்டிங் மூலம் மக்கள் அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வரும் நிலையில் பல தொழிற்துறை வல்லுனர்கள் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அதிகாரிகளிடம் இந்த வருமானத்தை எப்படிக் கையாள வேண்டும், எப்படிக் கணக்குக் காட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கம் கேட்டு வருகின்றனர்.
டிடிஎஸ் கழிப்பு
இன்று இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பகுதி நேரமாகவோ, ஒப்பந்த ஊழியராகவோ அல்லது ப்ரிலான்ஸ் முறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் மாதாந்திர அல்லது ஒப்பந்த அடிப்படையிலான சம்பளத்திற்கு 10 சதவீதம் டிசிஎஸ் பிடித்துக்கொண்டு தான் செலுத்தப்படுகிறது.
வருமான வரித் துறை
இதனால் நிறுவனம் வருமான வரித் துறை இந்தத் தொகை வருமான வரித் துறையிடம் செலுத்திவிடும், ஆனால் இதற்கான வருமானத்தைச் சரியான முறையில் கணக்குக் காட்டுவது மக்களின் கடமையாக உள்ளது. இந்தியாவில் முன்லைட்டிங் முக்கிய விவாதமாக மாறிய நிலையில் மத்திய வருமான வரித் துறையும் கட்டாயம் இப்பிரிவு வருமானத்தின் மீது கவனம் செலுத்தும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications