பழைய வரி முறை Vs புதிய வரி முறை- இதில் எதை தேர்வு செய்வது? - முழுமையான வழிக்காட்டி..!!

ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு (2024-25) தொடங்கியுள்ள நிலையில், மாத சம்பளக்காரர்களைச் சுற்றி வரும் ஒரு முக்கியமான கேள்வி பழைய வரி முறை, புதிய வரி முறை, இதில் எதைத் தேர்வு செய்வது?

மத்திய அரசு நாட்டில் இருக்கும் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்குக்கும், புதிய வரி முறையை டீபால்ட் தேர்வாகக் கருதினாலும், பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள், நன்மைகள் மற்றும் தீமைகளை வரி செலுத்துவோர் புரிந்து கொள்வது அவசியம்.

பழைய வரி முறை Vs புதிய வரி முறை- இதில் எதை தேர்வு செய்வது? - முழுமையான வழிக்காட்டி..!!

வரி செலுத்துவோர் தங்கள் வரி விவகாரங்கள் குறித்து நன்கு அறிந்த முடிவுகளை எடுக்க இது அவசியம். இல்லையெனில் வரியாகவே பல ஆயிரத்தை இழக்க வேண்டியிருக்கும்.

பழைய வரி முறை vs புதிய வரி முறை:

பழைய வரி முறை-யின் கீழ் ஒருவர் 80சி (முதலீடுகள், செலவுகள்), 80 டி (மருத்துவ செலவுகள்), HRA (வீட்டு வாடகை கொடுப்பனவு), மற்றும் LTA (விடுப்பு பயண கொடுப்பனவு) போன்ற பிரிவுகளின் கீழ் பல்வேறு வரி விலக்குகளையும், வரி குறைப்புகளையும் பெறும் வாய்ப்பு கிடைக்கும்..

இருப்பினும், இதில் அதிகப்படியான வரி பலகைகள் உள்ளது, இதேபோல் சிக்கலான வரி தாக்கல் முறை கொண்டு உள்ளதால், சாமானிய மக்கள் இதை தேர்வு செய்ய தயங்குகிறார்கள். பழைய வரி முறை-யின் கீழ் இருக்கும் வரி பலகைகள் என்ன..?

ரூ.0 முதல் ரூ.2,50,000 வரை: 0% வரி
ரூ.2,50,001 முதல் ரூ.5,00,000 வரை: 5% வரி
ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 வரை: 20% வரி
ரூ.10,00,000 க்கு மேல்: 30% வரி

இதேவேளையில் மறுமுனையில் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி முறை உள்ளது. இதில் குறைந்த வரி விகிதங்களைக் கொண்டுள்ளது, ஆனால் வரி விலக்குகள், வரி குறைப்புகள் இதில் இருக்காது. இதேபோல் இதில் எளிமையான வரி தாக்கல் செயல்முறையை வழங்குகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வாங்கிய சம்பளத்திற்கு ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் கழித்த பின்பு வரி கணக்கிடப்பட்டு வரி செலுத்த வேண்டும்.

இந்த புதிய வரி முறையின் கீழ் ரூ.7.5 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கும், முதலீடு இல்லாதவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வரி பலகைள் மூலம் பயனடையலாம்.

ஆனால், ரூ.10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுத்தால், 80சி, 80டி மற்றும் பிற பொருத்தமான பிரிவுகளின் கீழ் வரும் வரி சேமிப்பு கருவிகளில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் வரி சுமையைக் கணிசமாகக் குறைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

தங்களின் தேவைக்கேற்றவாறு பழைய அல்லது புதிய வரி முறையைத் தேர்வு செய்வதன் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் வரி செலவைக் குறைத்துக்கொள்ளலாம். இந்த முடிவை எடுப்பதற்கு முன் நிதி ஆலோசகரிடம் ஆலோசிப்பது நல்லது.

ரூ.0 முதல் ரூ.3,00,000 வரை: 0% வரி
ரூ.3,00,001 முதல் ரூ.6,00,000 வரை: 5% வரி
ரூ.6,00,001 முதல் ரூ.9,00,000 வரை: 10% வரி
ரூ.9,00,001 முதல் ரூ.12,00,000 வரை: 15% வரி
ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரை: 20% வரி
ரூ.15,00,000 க்கு மேல்: 30% வரி

எந்த வரி முறையைத் தேர்வு செய்வது?:

இதற்கான பதில் உங்கள் தனிப்பட்ட நிதி நிலை மற்றும் இலக்குகளைப் பொறுத்தே இருக்கும், இருக்க வேண்டும். இருப்பினும், முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளது, இதை இங்கே பார்ப்போம்.

மொத்த வருமானம்: குறைந்த வருமானம் (ரூ.7.5 லட்சம் வரை) உள்ள தனிநபர்கள் பொதுவாக புதிய வரி முறையிலிருந்து பயனடைவார்கள். ஏனென்றால், பழைய வரி முறையில் 87A பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது, ஆனால் புதிய முறையில் ரூ.50,000 நிலையான விலக்கு கிடைக்கிறது.

வரி விலக்குகள் மற்றும் குறைப்புகள்: 80சி, 80டி, HRA மற்றும் LTA போன்ற விலக்குகளை நீங்கள் அதிகம் பயன்படுத்தினால், பழைய வரி முறை உங்களுக்குச் சிறந்தது. புதிய வரி முறையில் வழங்கப்படும் வரிச் சலுகையுடன் ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்ய வேண்டியது அவசியம்.

முதலீட்டுத் திட்டம்: புதிய வரி முறையில் PPF, NPS பங்களிப்பு (முதலாளியின் பங்கைத் தவிர), ELSS மியூச்சுவல் பண்ட் போன்ற பிரபலமான வரி சேமிப்பு கருவிகளுக்கான விலக்குகளைப் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் முதலீட்டில் குறிப்பிடத்தக்கப் பகுதியாக இருந்தால், பழைய வரி முறை சிறந்த தேர்வாக இருக்கும்.

மருத்துவச் செலவுகள்: உங்களுக்கோ உங்கள் சார்புடையவர்களுக்கோ கணிசமான மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால், 80D பிரிவின் கீழ் வரும் விலக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் புதிய வரி முறை இது தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட விலக்குகளையே அனுமதிக்கிறது.

வீட்டுக் கடன்: முக்கியமாக நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்குச் செலுத்தப்படும் வட்டியை புதிய வரி முறையில் கழிக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+