1.2 கோடி பேருக்கு வருமான வரி ரீபண்ட்.. உங்களுக்கு வந்திருக்கா.. செக் செய்வது எப்படி..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இதுவரை 1.59 கோடி பேரின் வருமான வரி ரிட்டன் அறிக்கையை ஆய்வு செய்து கூடுதலாகச் செலுத்திய பணத்தைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அறிவித்துள்ளது.

 

மத்திய நேரடி வரி அமைப்பு இன்று பதிவிட்ட டிவிட்டர் பதிவில் ஏப்ரல் 1, 2021 முதல் ஜனவரி 10, 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.59 கோடி பேரின் வருமான வரி கணக்கு அறிக்கையை ஆய்வு செய்து 1,54,302 கோடி ரூபாய் அளவிலான தொகையை ரீபண்ட் செய்துள்ளது.

TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..! TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!

இதில் வருமான வரி ரிட்டன் தொகை கீழ் 53,689 கோடி ரூபாயும், கார்பரேட் வரி ரீப்ணட் பிரிவின் கீழ் 1,00,612 கோடி ரூபாயும், 2021-22 கணக்கீட்டு ஆண்டுக்கான 1.20 கோடி வருமான வரி கணக்கிற்கு 23,406.28 கோடி ரூபாய் தொகையை ரீபண்ட் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த 1,54,302 கோடி ரூபாய் ரீபண்ட் தொகையில் உங்கள் கணக்கிற்கும் கிடைத்துள்ளதா..? செக் செய்வது எப்படி..?!

 யாருக்கெல்லாம் ரீபண்ட் கிடைக்கும்

யாருக்கெல்லாம் ரீபண்ட் கிடைக்கும்

ஒரு நிதியாண்டுக்கு உங்களுடைய வரிப் பொறுப்பை விட அதிகமான வரியை நீங்கள் செலுத்தியிருந்தால், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்த பின்பு, நீங்கள் கூடுதலாகச் செலுத்திய வருமான வரியைத் திரும்பப் பெறத் தகுதியுடையவர்.

மார்ச் 15 நீட்டிப்பு

மார்ச் 15 நீட்டிப்பு

தனிநபர் வரி செலுத்துவோருக்கு, AY2021-22க்கான வருமான வரிக் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31 ஆக இருந்த நிலையில், தற்போது மார்ச் 15 வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித் துறை.

 ITR ஆய்வு
 

ITR ஆய்வு

நீங்கள் ITR ஐ தாக்கல் செய்தவுடன், வரித் துறை உங்கள் வருமானத்தையும், செலுத்திய வரியை சரிபார்த்து, கூடுதலாகச் செலுத்திய வருமான வரியை திருப்பிச் செலுத்துவதை ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்யும்.

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 143(1)ன் கீழ், இந்த அறிவிப்பு நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது.

வரி ரீபண்ட்

வரி ரீபண்ட்

தனிநபர் அல்லது நிறுவனங்கள் கூடுதலாகச் செலுத்திய வருமான வரியை திரும்பத் தத்தம் கணக்குகளுக்கு அளிக்கும் பணியைப் பாரத ஸ்டேட் வங்கியால் செயல்படுத்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோர் பரிந்துரைக்கும் வங்கிக் கணக்கில் அந்தத் தொகையை வங்கி வரவு வைக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கு எண், IFSC குறியீடு

வங்கிக் கணக்கு எண், IFSC குறியீடு


வருமான வரி திரும்பப் பெற சரியான வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். புதிய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் வங்கிக் கணக்கு எண் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டுப் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரீபண்ட்-ஐ செக் செய்வது எப்படி..

ரீபண்ட்-ஐ செக் செய்வது எப்படி..

வருமான வரி ரீபண்ட் தொகையைப் புதிய வருமான வரி ஈ-பைலிங் போர்ட்டல் மூலம் கண்காணிக்கலாம்:

https://eportal.incometax.gov.in/

1) முதலில் incometax.gov.in என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள். அதன் பின் உங்களின் பான் எண் மற்றும் பாஸ்வோர்டு-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.

2) இதன் பின்பு மேலே உள்ள டாஷ்போர்டில் இருக்கும் e-file என்பதைக் கிளிக் செய்து இன்கம் டாக்ஸ் ரிட்டன்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும். இதைத் தொடர்ந்து 'view file returns' என்பதைத் தேர்வு செய்யுங்கள்

3) இந்தப் பகுதியில் நீங்கள் சமீபத்தில் பைல் செய்யப்பட்ட ITR-ஐ தேர்வு செய்து View Details என்பதைக் கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்தில் உங்கள் டாக்ஸ் ரீபண்ட் தொகையைக் காட்டுவது மட்டும் அல்லாமல் ரீபண்ட் செய்யப்பட்டு உள்ளதா என்பது போன்ற அனைத்து தரவுகளையும் காட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Refund: CBDT issued 1.2 Crore Refunds How to Check IT Refund?

Income Tax Refund: CBDT issued 1.2 Crore Refunds How to Check IT Refund? 1.2 கோடி பேருக்கு வருமான வரி ரீபண்ட்.. உங்களுக்கு வந்திருக்கா.. செக் செய்வது எப்படி..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X