இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரியை செலுத்திய பிறகு ரீபண்ட் பெறுவதற்காக பலர் காத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு ரீபண்ட் வராமலே இருக்கும். உங்களுக்கும் வருமான வரி ரீபண்ட் வரவில்லை என்றால்.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதனால் ரீபண்ட் தொகை வருவதற்கு காலதாமதமாகிறது? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்த பிறகு ரீபண்ட் பெறுவதில் தாமதங்களை எதிர்கொள்ளும்போது பணம் திரும்ப கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு சிலருக்கு எரிச்சல் ஊட்டும் விஷயமாக இருக்கலாம். இதுபோன்ற நபர்கள் ரீபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் இருக்கும் காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வருமான வரி ரீஃபண்ட் தாமதத்திற்கான முக்கிய காரணங்கள்:
வருமான வரித்துறையின் செயல்முறை: வருமானவரித்துறை பொதுவாக ITR செயல் முறையை செயல்படுத்துவதற்கு சில நாட்கள் எடுக்கும். நீங்கள் ITR தாக்கல் செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டால், ITD இணையதளத்தில் உங்கள் ரீபண்ட் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்வும்.
பிராசசிங் செய்வதற்கான நேரம்: வெரிஃபிகேஷன் முடிந்த பிறகு வருமான வரித் துறை பொதுவாக 20 முதல் 45 நாட்கள் ரிட்டனைச் செயல்படுத்தும். இதனாலும் ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
தவறான வங்கிக் கணக்கு விவரங்கள்: தவறான வங்கிக் கணக்கு விவரங்கள், மூடப்பட்ட பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் போன்ற காரணங்களாலும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
சிஸ்டம் பிரச்சனைகள்: சில நேரங்களில், வருமான வரித் துறையின் சிஸ்டம் அல்லது உங்கள் வங்கியின் சிஸ்டம்-களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு தாமதத்தை ஏற்படுத்தலாம்.
போர்டல் அப்டேட்: IT போர்ட்டலில் ஏற்படும் மாற்றங்கள் ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தலாம். கடந்த ஜூலை 31-ஆம் தேதி அன்று வருமான வரி தாக்கல் செய்வதற்கு பலர் ITR போரட்டலில் சிக்கல்களை எதிர்கொண்டது நம் அனைவருக்கும் தெரியும். இதே போன்று போர்ட்டலில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் செயலாக்கத்திற்கு நேரம் எடுக்கலாம்.
நிலுவைத் தொகை: முந்தைய நிதியாண்டில் உங்களுக்கு ஏதேனும் வரி தீர்க்கப்படாமல், நிலுவையில் இருந்தால் ரீபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் அந்த நிலுவைத் தொகையை திருப்பி செலுத்த உங்கள் ரீபண்ட் பணம் பயன்படுத்தப்படும். இது பற்றிய அறிவிப்பை மட்டும் வருமான வரித்துறையிடம் இருந்து நீங்கள் பெறுவீர்கள்.
ஆய்வுக்கு உட்படும் கணக்குகள்: வருமான வரித்துறை சிலர் வருமானங்களைப் பற்றி ஆராய நெரிடலாம். நீங்கள் இதுபோன்ற ஆய்வுக்கு உட்பட்டிருந்தால், உங்களுடைய ரீபண்ட் பணத்தைத் திரும்ப பெறுவது தாமதமாகலாம்.
வருமான வரி இ ஃபைலிங் போர்ட்டலில் இருந்து ரீஃபண்ட் நிலையை எப்படி சரிபார்ப்பது?:
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ ஆன்லைன் இ ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்
ஸ்டெப் 2: உங்கள் கணக்கில் உள்நுழையவும். உள்நுழைய உங்கள் பாஸ்வேர்ட், PAN மற்றும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: அதில் "My Account" என்ற பிரிவுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 4: அதில் "Refund/Demand Status" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வருமான வரி ரீபண்ட்-இன் நிலை, மதிப்பீட்டு ஆண்டு, தற்போதைய நிலை, ரீஃபண்ட் வராததற்கான காரணங்கள் மற்றும் பணம் செலுத்தும் முறை பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும்.
ஒரு மாதத்திற்கு முன்பே ஐடிஆர் தாக்கல் செய்தும் இன்று வரை ரீபன்ட் வரவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் தாக்கல் செய்வதற்கு ரீபண்ட் கிடைத்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நபர்கள் மேற்குறிய காரணங்கள் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.
ரீபண்ட் பெறுவதில் மேலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் இது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications