சென்னை: இந்தியாவில் ஒருவருடைய வருமானத்திற்கு ஏற்ப அவரவர் வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்தி விட்டு பெரும்பாலான மக்கள் ரீபண்ட் பெற காத்திருக்கின்றனர். சமீப காலமாக ரீபண்ட் வராமல் உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் வருமான வரித்துறையின் ரீபண்ட் தொகையைப் பெறவில்லை என்றால், அதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
வருமான வரித்துறையின் ரீபண்ட் கிடைக்கவில்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது தொடர்பான காரணங்களை பற்றி ஆராய்ந்து, கண்டறிந்து சரியான நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். அதில் முதலாவதாக வருமானவரித்துறை, உங்களுக்கு மெயில் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ ஏதேனும் கூடுதலான விவரங்களை கேட்டால் அவற்றை அறிந்து உடனே தகுந்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வருமான வரித்துறையின் செயல்முறை: வருமானவரித்துறை பொதுவாக ITR செயல் முறையை செயல்படுத்துவதற்கு சில நாட்கள் எடுக்கும். நீங்கள் ITR தாக்கல் செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டால், ITD இணையதளத்தில் உங்கள் ரீபண்ட் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்வும்.
ITR ரீபண்ட் பெறுவதற்கான தகுதி: வருமான வரி கணக்கு செயல்முறை முடிந்த பிறகு, நீங்கள் வருமானவரித்துறையின் ரீபண்ட் தொகை பெற தகுதியுடையவர்களாக.. இல்லையா.. என்பதை சரி பார்க்கவும். உங்களுடைய தகுதி உறுதிப்படுத்த பட்டவுடன் அதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் உங்களுக்கு ரீபண்ட் தொகை வரவிருந்தால் வந்து சேர்ந்துவிடும்.
பேங்க் அக்கவுண்ட் விவரங்கள்: ITR ரீபண்ட் பெறுவதற்கு, உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் முன்னதாகவே சரி பார்க்கப்பட வேண்டும். இல்லை என்றால் பணம் உங்களுக்கு திரும்ப வழங்கப்படுவதில் சிக்கல்கள் வரலாம். கூடுதலாக உங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் உங்கள் பான் கார்டின் விவரங்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். உங்கள் ITR-இல் குறிப்பிடப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் தவறானதாக இருந்தால் நீங்கள் பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல்கள் வரலாம்.
இ-வெரிஃபிகேஷன் செயல்முறை: உங்கள் வருமான வரி கணக்கை இ-வெரிஃபிகேஷன் செய்வது ITR தாக்கல் செய்வதற்கும், ரீபண்ட் பெறுவதற்கும் முக்கியமான மற்றும் கட்டாயமான படியாகும். நீங்கள் ITR தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் இ-வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் இ-வெரிஃபிகேஷன் செய்தால் மட்டுமே உங்களுடைய ரீபண்ட் தொகை பெறுவதற்கான செயல்முறையை விரிவு படுத்த முடியும்.
நிலுவைத் தொகை: முந்தைய நிதியாண்டில் உங்களுக்கு ஏதேனும் வரி தீர்க்கப்படாமல், நிலுவையில் இருந்தால் ரீபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் அந்த நிலுவைத் தொகையை திருப்பி செலுத்த உங்கள் ரீபண்ட் பணம் பயன்படுத்தப்படும். இது பற்றிய அறிவிப்பை மட்டும் வருமான வரித்துறையிடம் இருந்து நீங்கள் பெறுவீர்கள்.
ஆய்வுக்கு உட்படும் கணக்குகள்: வருமான வரித்துறை சிலர் வருமானங்களைப் பற்றிய ஆராய நெரிடலாம். நீங்கள் இதுபோன்ற ஆய்வுக்கு உட்பட்டிருந்தால், உங்களுடைய ரீபண்ட் பணத்தைத் திரும்ப பெறுவது தாமதமாகலாம்.
தொழில்நுட்ப காரணங்கள்: சில நேரங்களில் சர்வர் பிரச்சினைகள் அல்லது பேக்லாக் போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ரீபண்ட் பெறுவது தாமதமாகலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில், மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ITD ஹெல்ப்லைனை அணுகுவது சரியான தேர்வாக இருக்கும். இல்லையெனில் நீங்கள் மெயில் கூட அனுப்பலாம்.
ரீபண்ட் பெறுவதில் மேலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் இது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications