இந்தியா முழுவதும் ஏராளமான மக்களுக்கு தங்களது வருமான வரி ரீபண்ட் தொகை இன்னும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்த பலருக்கு வருமான வரித் துறை அனுப்பிய செய்திகளால் குழப்பம் அதிகரித்துள்ளது.
வருமான வரித்துறை அனுப்பிய தகவலில், ரீபண்ட் கோரிக்கை சில முரண்பாடுகள் காரணமாக ரிஸ்க் மேனேஜ்மென்ட் செயல்முறையின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் ITR அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

ரீபண்ட் தாமதத்திற்கான முக்கிய காரணங்கள்
பொதுவாக, ஐடிஆர் தாக்கல் செய்து சரிபார்க்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களுக்குள் ரீபண்ட் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பலருக்கு ரீபண்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தாக்கல் செய்த ஐடிஆர் அறிக்கையில் உள்ள தகவல்களுக்கும் வரித் துறையிடம் உள்ள பதிவுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதால் ரீபண்ட் தொகை வழங்கப்படாமல் உள்ளது.
உதாரணமாக, வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ), ஆயுள் காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு போன்றவற்றின் மீது தவறான வருமான வரி விலக்கு கோரிக்கைகளை, அல்லது வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானத்தை மறைத்தல் போன்றவை இதில் அடங்கும். இதேபோல் நன்கொடை வழங்கியத்திலும் பல குழப்பம் நிலவுகிறது.
இதுமட்டும் அல்லாமல், வங்கிக் கணக்கு சரிபார்க்கப்படாதது அல்லது தவறான விவரங்கள் கொடுக்கப்பட்டிருப்பது போன்ற பிற தொழில்நுட்ப காரணங்களும் தாமதத்திற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
வரித் துறை இந்த முரண்பாடுகளை கண்டறிய மேம்பட்ட டேட்டா அனலிசிஸ் முறையை பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சில ரீபண்ட் கோரிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது வரி செலுத்துநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக பெருமளவில் வருமான வரி செலுத்துவோருக்கு மின்னஞ்சல்களும் மற்றும் எஸ்எம்எஸ்-களும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஈமெயில் மற்றும் எஸ்எம்எஸ் வருமான வரி செலுத்தியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மட்டும் அல்லாமல் முன்கூட்டியே எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென வருமான அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய கெடு விதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் வருமான வரி செலுத்துவோர் எந்த வகையிலான முரண்பாடுகள் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர், அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்த தெளிவு இல்லாமல் குழப்பம் நீடிக்கிறது.
டிசம்பர் 31 கெடு:
வருமான வரித் துறை அனுப்பிய தகவலில், 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கெடுவிற்குள் தவறுகளை சரிசெய்து திருத்த அறிக்கை தாக்கல் செய்தால், ரீபண்ட் விரைவில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தாக்கல் செய்த அறிக்கையை மீண்டும் சரிபார்த்து, படிவம் 16, ஆண்டு தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) மற்றும் பிற ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தவறு இருந்தால் உடனடியாக திருத்தி தாக்கல் செய்வது சிறந்தது.
இந்த கெடு மிகக் குறுகியதாக இருப்பதால், பலர் போதிய காலம் இல்லை எனவும் சமுகவலைத்தளத்தில் புலம்பி வருகின்றனர்.
டிசம்பர் 31க்குப் பிறகு என்ன வழி?
டிசம்பர் 31க்குப் பிறகு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்பது பொதுவான விதி. ஆனால், உண்மையான பிரச்சனை இருந்தால், வரித் துறையிடம் தாமதத்தை மன்னிக்கக் கோரும் விண்ணப்பத்தை (கண்டோனேஷன் ஆஃப் டிலே) சமர்ப்பிக்கலாம். இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், அபராதமும் வட்டியும் செலுத்திய பிறகு ரீபண்ட் கோர முடியும்.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications