புதிய வருமான வரித் தளத்தில் பல குளறுபடிகள், பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் தொடர் கண்காணிப்பு மற்றும் கோரிக்கை அடிப்படையில் இன்போசிஸ் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறது. ஆனால் வருமான வரித் தளம் மெதுவாக இயங்குவதாக இன்னமும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய வருமான வரித் தளத்தில் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள்ள காரணத்தால் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளனர்.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி புதிய வருமான வரித் தளத்தில் ஜூலை 24 முதல் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்து வருவதாகவும், அதிலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை இதன் எண்ணிக்கை 1,50,000 ஆக உயர்ந்துள்ளது.
புதிய வருமான வரித் தளம்
இதன் மூலம் புதிய வருமான வரித் தளத்தின் பயன்பாடு மற்றும் மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் வரி வருமான செலுத்துவோர் மற்றும் வரி தணிக்கையாளர் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பதாகவும், இணையதளம் இயங்குவதில் மெதுவாக (slow) இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
10 சதவீதம் பேர்
மேலும் புதிய வருமான வரித் தளத்திற்குக் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் தினமும் 10 லட்சம் பேர் லாக்இன் செய்ததாகத் தெரிவித்துள்ளது. ஆனால் அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே தினமும் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
வருமான வரி அறிக்கை
ஜூலை 13 முதல் ஜூலை 28 வரையில் சுமார் 5,50,000 படிவங்கள் புதிய வருமான வரித் தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு எளிதாக்க வேண்டும் என்பதற்காகத் தத்தம் நபரின் வருமான தரவுகள் தற்போது தயாராக வருமான படிவத்தில் Pre Filled data-வாக உள்ளது.
கூடுதல் விபரம்
அடுத்தச் சில நாட்களில் வருமான வரி செலுத்துவோரின் வட்டி வருமானம், ஈவுத்தொகை வருமானம், கேப்பிடல் கெயின்ஸ் வருமானம் போன்ற தரவுகளை பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இன்போசிஸ்
புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், தொடர்ந்து புதுப்புது சேவைகளைக் கொண்டுவரவும், வருமான வரி செலுத்துவோருக்கு எளிதாகவும், மேம்பட்ட அனுபவத்தை அளிக்கவும் வருமான வரித்துறை, ICAI, மற்றும் இதர அரசு அமைப்புகள் தொடர்ந்து இன்போசிஸ் உடன் நெருங்கி இயங்கி வருகிறது.
மத்திய நிதியமைச்சகம்
கொரோனா தொற்று காரணமாக வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய நிதியமைச்சகம் புதிய வருமான வரி தளத்தை அறிமுகம் செய்து வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
இன்போசிஸ்
புதிய வருமான வரி தளத்தை உருவாக்க மத்திய அரசு 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொடுத்து மக்களின் பணத்தை வீண் செய்துள்ளது என பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தரவுகள் அடிப்படையில் மத்திய அரசு புதிய வருமான வரி தளம் மற்றும் CPC 2.0 உருவாக்க ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரையில் 164.5 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகத் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications