ஒவ்வொரு முறையும் புதிய நிதியாண்டு தொடக்கம் நெருங்கி விட்டால் நிறுவனங்கள் தங்களுடைய வரி செயல்முறையை தொடங்கி விடும். வருமான வரி செலுத்துவது என்பது ஜனநாயக கடமையாகும். தங்கள் வரி கடமைகளில் இருந்து தள்ளி இருப்பவர்களை வருமான வரித்துறை பல்வேறு வழிகளின் மூலம் கண்டுபிடித்துவிடும். நீங்கள் ஒரு நிதியாண்டில் செய்த பரிவர்த்தனை, உங்களுடைய வங்கி பரிவர்த்தனை விவரங்கள் போன்ற சில விவரங்களை வங்கிகள் வழங்க வேண்டும். அதோடு வெளிநாட்டு பரிவர்த்தனைகளின் விவரங்களும் வருமானவரித்துறையை சென்றடையும். எனவே வரி செலுத்துபவர் தங்கள் வங்கி அறிக்கைகளில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கிலிருந்து மொத்தமாக பணத்தை டெபாசிட் செய்வது முதல் பணத்தை திரும்ப பெறுவது வரை அனைத்திற்கும் விதிகள் உள்ளன. இதை மீறும் நபர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். இந்தப் பதிவில் ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் மொத்தமாக எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்? எவ்வளவு திரும்பப் பெற வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.

ஒரு நிதியாண்டில்.. அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரையில் உங்களுடைய சேமிப்பு கணக்கில் நீங்கள் செய்யும் பரிவர்த்தனையை வருமானவரித்துறையிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டும். இது போன்ற பரிவர்த்தனைகள் பல கணக்குகளில் இருந்தாலும் வங்கிகள் அதை தெரிவிக்க வேண்டும்.
10 லட்சத்துக்கும் மேல் பணம் டெபாசிட் செய்தல்: ஒரு நிதியாண்டில் ஒருவர் தங்களுடைய சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால்.. வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவித்துவிடும்
வருமானவரிச் சட்டம் 1962-இன் பிரிவு 114 B-யின் கீழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரே நாளில் ரூ. 50,000-த்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்தால் உங்கள் பான் எண்ணை வழங்க வேண்டும். உங்களிடம் பான் இல்லை என்றால் 60/61 படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வருமானவரித்துறை நோட்டீஸ்க்கு எப்படி பதில் அளிக்க வேண்டும்?: ஒரு வேலை அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்து அதற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், நீங்கள் உங்களுக்கு வந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற ஆதாரங்களை வைத்திருந்தால் பயப்படத் தேவையில்லை. வங்கி அறிக்கைகள், முதலீட்டு பதிவுகள், பரம்பரை ஆவணங்கள் ஆகியவை இதற்கு தேவைப்படும்.
ரூ.2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பரிவர்த்தனை: வங்கிகளில் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ரொக்க பரிவர்த்தனை செய்தாலும் வருமானவரித்துறை அந்த குறிப்பிட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பும்.
இது போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஒரு நிதியாண்டில் உங்கள் வங்கி கணக்கில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதோடு தேவையற்ற சிக்கலை தவிர்ப்பதற்கு சரியான தகவல்களை கொடுத்து ஐடிஆர் தாக்கல் செய்யுங்கள்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications