இந்தியாவில் வருமானம் பெறும் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வருமான வரி தாக்கல் செய்வது என்பது ஜனநாயக கடமையாகும். அப்படி வருமான வரி தாக்கல் செய்யும்போது வெளிநாட்டிலுள்ள சொத்துக்கள் மற்றும் வருமானத்தையும் தெளிவாக வருமானவரி தாக்கல் படிவத்தில் வெளிப்படுத்த வேண்டும். இதை செய்ய தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.
வருமானவரித்துறை தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதை குடிமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

அதோடு வருமானவரி தாக்கல் செய்பவர், தங்களுடைய வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தையும் வருமான வரி கணக்கில் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரித்துறை வரி செலுத்துவதற்கான பொது ஆலோசனையை வெளியிட்டது. வரி செலுத்துவோர் 2024 முதல் 2025-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி ரிட்டனில் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். மேலும் எந்த தகவல்களையும் மறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
எந்தெந்த வெளிநாட்டு சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்?: வங்கி கணக்கு, கேஷ் வேல்யூ இன்சூரன்ஸ் காண்ட்ராக்ட் அல்லது வருடாந்திர ஒப்பந்தம், வணிகத்திற்கு கிடைக்கும் வட்டி அல்லது வருமானம், அசையா சொத்து, பங்குகள் மற்றும் கடன்களுக்கான வட்டி போன்ற அனைத்து சொத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும்.
அபராதம் தொடர்பான செய்திகள் எப்படி அனுப்பப்படும்?: 2024 முதல் 2025-ஆம் ஆண்டிற்கான ஐடிஆர்-ரை ஏற்கனவே தாக்கல் செய்த இந்திய குடிமக்களுக்கு SMS மற்றும் மெயில் மூலம் CBDT தகவல்களை அனுப்பவுள்ளது. தங்களுடைய வெளிநாட்டு சொத்துக்களை மறைக்கும் இந்திய குடிமக்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க இந்திய தகவல் தொடர்பு ஆணையம் பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதேபோல ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கு வரம்பை மீறி லட்ச கணக்கில் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர் குறித்த விவரங்களை வங்கிகள் வருமானவரித்துறைக்கு தெரிவிக்கும். எனவே ஒரு வரி செலுத்துவோரை பற்றிய விவரங்கள் பல்வேறு வழியாக வருமானவரித்துறையைச் சென்றடையும்.
எனவே வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தையும் வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்து.. தேவையற்ற அபராதம் விதிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications