வெளிநாட்டில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகள் வராமல் இருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
புதிய மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து 60 மில்லியன் டாலர்களை திரட்டிய பிறகு, இந்த ஆண்டு இந்தியாவின் இரண்டாவது யூனிகார்ன் நிறுவனமாக InCred உயர்ந்துள்ளது.

InCred இன் வெல்த் மேனேஜ்மென்ட் துணை நிறுவனமான InCred Wealth, சுமார் 36.76 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை அதன் தாய் நிறுவனமான InCred-யிடம் இருந்து முதலீட்டை திரட்டியுள்ளது.
இதை தொடர்ந்து MEMG குடும்ப அலுவலகத்திடம் இகுந்து 9 மில்லியன் டாலர், RP குழும நிறுவனங்களின் தலைவர் ரவி பிள்ளை-யிடம் இருந்து 5.4 மில்லியன் டாலர் மற்றும் Deutsche Bank இன் இணைத் தலைவர் ராம் நாயக்-யிடம் இருந்து 1.2 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட InCred-ன் இன்கிரெட் ஸ்பெஷல் ஆப்பர்சூனிட்ட் பண்ட், Varanium Capital Advisors மற்றும் NABS Vriddhii ஆகியவையும் இந்த முதலீட்டு சுற்றில் பங்கேற்றன. இதன் மூலம் InCred நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1.03 பில்லியன் டாலரை தொட்டு யூனிகார்ன் என்ற முக்கிய அந்தஸ்து பெற்றுள்ளது.
InCred Wealth நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து கடைசியாக 68 மில்லியன் டாலர் கடன் பெற்றது. 2022ஆம் நிதியாண்டில் 488 கோடியாக இருந்த இயக்க மதிப்பீடு 2023 ஆம் நிதியாண்டில் 77.4 சதவிகித வளர்ச்சி அடைந்து 865.6 கோடியாகப் பதிவு செய்துள்ளது.
Zomato கடந்த ஆண்டு கடன் வழங்கும் InCred உடன் கடன் வசதிகளுக்காக ஒரு மூலோபாய கூட்டணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
செயல்பாட்டு மூலதனக் கடன்கள், குறுகிய காலக் கடன்கள் மற்றும் சேனல் பைனான்ஸ் ஆகியவற்றுடன் SME கடன்களையும் அளிக்கிறது. InCred இன் போர்ட்ஃபோலியோவில் தனிப்பட்ட கடன்கள், திருமணக் கடன்கள், மருத்துவக் கடன்கள் மற்றும் பயணக் கடன்கள் மற்றும் கல்விக் கடன்கள் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications