நாடு முழுவதுமே எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்க கூடிய சூழலில் வீட்டு உபயோக சிலிண்டர்களும் தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்றால் அச்சம் அதிகமான மக்களை ஆட்கொண்டு இருக்கிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் வீட்ட உபயோக சிலிண்டரும் இதேபோல நிறுத்தப்பட்டால் என்ன செய்வது என பதற்றம் அடைந்துள்ள மக்கள் கூடுதலாக சிலிண்டர் வாங்கி வைத்துக் கொள்வோம் என அதிகமாக புக்கிங் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.
சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான அழைப்புகள் வழக்கத்தை விட அதிகரித்திருப்பதால் இண்டேன் நிறுவனத்தின் கேஸ் புக்கிங் சிஸ்டமே செயல்படாமல் நின்று போய்விட்டது. வழக்கத்தை விட 10 மடங்கு அதிகமாக அழைப்புகள் வந்ததால் தங்கள் நிறுவனத்தில் சிலிண்டர் புக்கிங் அமைப்பே கிராஸ் ஆகிவிட்டது என இண்டேன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இண்டேன் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தற்போது எதிர்பாராத சவாலான சூழலில் நாம் எதிர் கொண்டிருக்கிறோம் , ஐவிஆர்எஸ் மற்றும் மிஸ்டு கால் நம்பர்கள் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வது வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகரித்து இருக்கிறது என கூறியிருக்கிறது.

இதன் காரணமாக சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான நம்முடைய இந்த ஐவிஆர்எஸ் அமைப்பே அதிக சுமை ஏற்பட்டு கிராஸ் ஆகி இருக்கிறது என கூறியுள்ளது. எனவே ஐவிஆர்எஸ் மற்றும் மிஸ்டு கால் முறையில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத வாடிக்கையாளர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம் என தெரிவித்திருக்கிறது.
ஏராளமான வாடிக்கையாளர்கள் வழக்கமாக சிலிண்டர் முன்பதிவு செய்யக்கூடிய தொலைபேசி எண்கள் வேலை செய்யவில்லை என தொடர்ச்சியாக புகார் கூறி வந்ததை அடுத்து இண்டேன் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 75888 88824 எண்ணிற்கு whatsapp மூலம் 'REFILL' என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் உடனடியாக உங்களுக்கான சிலிண்டர் புக்கிங் செய்யப்படும். அல்லது INDIAN OIL ONE என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கஸ்டமர் எண்ணை உள்ளிட்டு அதன் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வழக்கமான முன்பதிவு எண்கள் வேலை செய்யாத பட்சத்தில் 77189 55555 எண்ணிற்கு உங்களுடைய வாடிக்கையாளர் எண் மற்றும் ஏஜென்சி விவரங்களோடு குறுஞ்செய்தி அனுப்பலாம். இல்லையென்றால் 84549 55555 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இந்த வசதி தற்காலிகமாக கிராஸ் ஆன நிலையில் படிப்படியாக அது சீரமைக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வேளை எந்த நம்பரிலுமே உங்களால் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால் நேரடியாக கேஸ் புக்கிங் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே ஏராளமான வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்தும் தங்களுக்கு வந்து சேரவில்லை எனக் கூறி நேரடியாக கேஸ் புக்கிங் மையங்களுக்கு படை எடுக்கத் தொடங்கி விட்டனர். இது விநியோகஸ்தர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி தந்திருக்கிறது.பலரும் கையில் பில்லை வாங்கி கொண்டு வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம் நாங்களே சிலிண்டரை கொண்டு சென்று விடுவோம் எங்களுக்கு டெலிவரி கொடுங்கள் என கேட்கிறார்களாம்.
More From GoodReturns

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications