இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஸ்தாரா விமான நிறுவனம் சுதந்திர தின சிறப்பு டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் அனைத்து வகுப்புகளிலும் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.. மேலும் அதற்கான டிக்கெட் விலை எவ்வளவு? என்பது குறித்த விபரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் விலைகள்: பாக்டோக்ராவிலிருந்து திப்ருகர் வரை பயணிக்க எகானமி கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலை ரூ. 1,578. மும்பையிலிருந்து அகமதாபாத் வரை செல்ல பிரீமியம் எகானமி கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலை ரூ. 2,678. மும்பையிலிருந்து அகமதாபாத் செல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலை ரூ. 9,978.

வெளிநாட்டு பயணங்களுக்கான ரிட்டன் டிக்கெட்டுகள் அடங்கிய விலை: டெல்லியிலிருந்து காத்மாண்டு செல்லும் விமானங்களுக்கான எகானமி கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலை ரூ. 11,978. டெல்லியிலிருந்து காத்மாண்டு செல்லும் விமானங்களுக்கான பிரீமியம் எகானமி கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலை ரூ. 13,978. மேலும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டின் தொடக்க விலை ரூ. 46,978.
விஸ்தார விமான நிறுவனம் வழங்கும் தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 31-ஆம் தேதி வரை பயணிக்க இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளாலாம்.
எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது?: விஸ்தாராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.airvistara.com மூலம், விஸ்தாராவின் iOS மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷன்கள் , விஸ்தாராவின் விமான டிக்கெட் அலுவலகங்களில், விஸ்தாராவின் அழைப்பு மையங்கள், OTAகள் மற்றும் பயண முகவர்கள் மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
தள்ளுபடி கட்டணங்கள் பொருந்தும் இடங்கள்: அபுதாபி, பாலி, பாங்காக், கொழும்பு, தம்மாம், டாக்கா, துபாய், தோஹா, பிராங்பேர்ட், ஹாங்காங், ஜெட்டா, காத்மாண்டு, லண்டன், மாலே, மொரிஷியஸ், மஸ்கட் மற்றும் சிங்கப்பூர், பாரிஸ் போன்ற சர்வதேச இடங்களுக்கு மட்டுமே டிக்கெட் விலையில் தள்ளுபடியைப் பெற முடியும். இதற்கு மட்டுமே தள்ளுபடி கட்டணங்கள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகை கிடைக்கும், மேலும் இருக்கைகள் விற்று தீர்ந்தால் வழக்கமான கட்டணங்கள் பொருந்தும். இந்த சலுகையை மற்ற வவுச்சர்கள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் போன்றவற்றுடன் இணைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுக்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் இந்த தள்ளுபடி சலுகைப் பொருந்தாது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் விஸ்டாரா ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.airvistara.com மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications