மத்திய அரசு ஹர் கர் திரங்கன் அபியான் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் திட்டத்துடன் புதிய சேவையை துவங்கியுள்ளது. இந்த வருடம் சுதந்திர தினத்திற்கு பல முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அரசுக்கும் மக்களுக்குமான நேரடி தொடர்பை உருவாக்கும் ஒரு திட்டத்தை இந்திய தபால் துறை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற முக்கிய திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கக்கப்பட்ட
ஹர்கர் திரங்கன் அபியான் கீழ் தபால் துறை அதன் 1.60 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடிகளை விற்பனை செய்ய உள்ளது.

ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தேசியக் கொடியை தபால் துறையின் ePostOffice வசதி மூலம் வாங்கலாம். உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் தபால் துறை அலுவலகத்தில் இப்போதே தேசிய கொடி விற்பனையை துவங்கியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடுகள் நடத்தப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டு 13 லட்சம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆன்லைன் வாயிலாக தேசிய கொடி வாங்குவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
படி 1 : முதலில் https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும்
படி 2: தபால் துறை இணைய தளத்தில் 'உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து தேசியக் கொடியை வாங்கவும் அல்லது ஆன்லைனில் வாங்கவும்' என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
படி 3: 'ஹர் கர் திரங்கா' என்பதற்கு கீழ் இருக்கும் buy என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: ஆன்லைனில் முன்பதிவு செய்ய ரூ.25 செலுத்த வேண்டும்.
படி 5: அஞ்சல் துறை உங்கள் வீட்டில் கொடியை நேரடியாக வழங்கும். ஒருவர் அதிகபட்சமாக ஐந்து கொடிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் மற்றும் கூடுதல் டெலிவரி கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதால், இந்த தொகை அரசிடம் நேரடியாக சென்று அடையும்.
ஆன்லைன் வாயிலாக வாங்க முடியாதவர்கள், அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்-ல் நேரடியாக சென்று கொடியை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications