டெல்லி: இந்திய தொழிற்துறை உற்பத்தி கடந்த அக்டோபர் 2019-ம் மாதத்துக்கு இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் 2019-க்கான தொழிற்துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 2018-ல் தொழில்துறை உற்பத்தி 8.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த தொழில் துறை உற்பத்திக் கணக்கு நமக்கு தெளிவாகச் சொல்கிறது. இப்படி இந்திய தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து குறைந்து இருப்பதால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் நம்மால் உணர முடிகிறது.

உற்பத்தி, மின்சாரம், கேப்பிட்டல் கூட்ஸ், கட்டுமானப் பொருட்கள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் என பல முக்கிய துறைகள் பலத்த சரிவைச் சந்தித்து இருக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 2018-ஐ விட இந்த அக்டோபர் 2019-ல் சுரங்கத் துறை -8.0 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
உற்பத்தித் துறை -2.1 சதவிகிதம், மின்சாரம் -12.2 %, கேப்பிட்டல் கூட்ஸ் -21.9 %, இடைநிலைப் பொருட்கள் 22.2 சதவிகிதம், கட்டுமானப் பொருட்கள் -9.2 சதவிகிதம், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் -18.0 சதவிகிதம், கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் -1.1 சதவிகிதம் என சில துறைகளில் வளர்ச்சியும், பல துறைகளில் சரிவையும் சந்தித்து இருக்கிறது.
இன்று வெளியான நுகர்வோர் பணவீக்க தரவுகள் இந்தியப் பொருளாதாரத்துக்கு அத்தனை நல்லதாக இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான நுகர்வோர் பணவீக்கம் நவம்பர் 2019 மாதத்துக்கு 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருப்பதும் இந்திய பொருளாதாரத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.
தமிழகத்தின் கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.22 சதவிகிதமாகவும், தமிழகத்தின் நகர் புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.36 சதவிகிதமாகவும், ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.26 சதவிகிதமாகவும் இருக்கிறது.
இருப்பதிலேயே ஒடிஸா மாநிலத்தில் தான் நுகர்வோர் பணவீக்கம் 7.23 சதவிகிதம் என விலை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவில் நுகர்வோர் பணவீக்கம் 2.56 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications