கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி மதிப்பீடு (Estimates of Index of Industrial Production - IIP) விவரங்கள் இன்று (12 அக்டோபர் 2020) மாலை வெளியாகி இருக்கிறது.
கடந்த மார்ச் 2020 இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட்ட லாக் டவுன் கட்டுப்பாடுகள், தற்போது மெல்ல மெல்ல படிப்படியாக தளர்த்தபட்டு வருகின்றன.
இருப்பினும் இன்னும் பழைய படி, எல்லா தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரங்கள் வழக்கம் போல இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. உதாரணம் திரையரங்குகள். சரி ஆகஸ்ட் 2020 மாதத்துக்கன இந்திய தொழில் துறை உற்பத்தியைப் பார்ப்போம்.

இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி (IIP) இந்த ஆகஸ்ட் 2020-ல் 8.0 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தன் வலைதளத்தில் சொல்லி இருக்கிறது. இது ஒரு விரைவு மதிப்பீடு (Quick Estimate) தான் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறது.
சுரங்கத் தொழில் கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 9.8 சதவிகித வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 8.6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறதாம்.
அதனைத் தொடர்ந்து மின்சாரத் துறையை, ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 1.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
பிரைமரி கூட்ஸ் துறையின் உற்பத்தியை, ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 11.1 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது
கேப்பிட்டல் கூட்ஸ் உற்பத்தியை, கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 15.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது புள்ளியியல் துறையின் அறிக்கை.
அதே போல இண்டர்மீடியட் கூட்ஸ், கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 6.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது.
இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & கன்ஸ்ட்ரக்ஷன் கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 2.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது.
கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 10.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது.
கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் கடந்த ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும் போது, இந்த ஆகஸ்ட் 2020-ல் 3.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருப்பதாகச் சொல்கிறது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அறிக்கை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications