மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024ஆம் ஆண்டு நிதி மசோதாவில் ரியல் எஸ்டேட் விற்பனை மீதான வரி விதிப்பு முறையில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜூலை 23, 2024-க்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கான நீண்ட கால மூலதன வரி (LTCG) 12.5 சதவீதம் என்ற புதிய விகிதம் என்ற புதிய வரி விதிப்பு முறையின் கீழும், ஏற்கனவே நடைமுறையிலிருந்த 20 சதவிகித விகிதத்தில் இண்டக்சேஷன் சலுகையுடன் கணக்கிட்டு கேப்பிடல் கெயின்ஸ் வரியைச் செலுத்தவும் அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இதன்படி ஜூலை 23, 2024-க்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களை விற்கும் போது வரி செலுத்துவோர் மேற்கண்ட இரண்டு வழிகளில் எது தங்களுக்கு லாபகரமாக இருக்கிறதோ அதை தேர்வு செய்யலாம்.
நிதியமைச்சர் என்ன அறிவித்தார்?: 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் விற்பனையில் இருக்கும் இண்டக்சேஷன் சலுகையை நீக்கி, நீண்ட கால மூலதன வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாகக் குறைப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
வரி குறைக்கப்படலும், இண்டக்சேஷன் சலுகை நீக்கப்பட்டது மூலம் பெரும்பாலான மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் இதை ரியல் எஸ்டேட் துறையினரும், மக்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாகச் சொந்த வீடு சமீபத்தில் வாங்கியவர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கும் என்பதால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனம் எழுந்தது.
ரியல் எஸ்டேட்டில் இருந்து இண்டக்சேஷன் சலுகையை நீக்குவது குறித்து வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா பட்ஜெட்-க்கு பிந்தைய பேட்டியில் கூறும், பங்குகள், வட்டி வருமானம் மற்றும் வைப்புத்தொகை உள்ளிட்ட பிற சொத்து வகைகளுக்கு இதுபோன்ற நன்மை இல்லை என்றார். இதை வரி விதிப்பில் ஒரு மறுசீரமைப்பு, சமமாகப் பார்க்கப்படும் நடவடிக்கையாகக் கருத வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ரியல் எஸ்டேட் துறைக்கு என்ன மாற்றங்கள்?
2024ஆம் ஆண்டு நிதி மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி,
2024 ஜூலை 23-க்கு முன்பு வீடுகள் வாங்கிய தனிநபர்கள் அல்லது ஹிந்து இணைப்பு குடும்பங்கள் புதிய திட்டத்தின் கீழ் 12.5 சதவிகித வரியை இண்டக்சேஷன் சலுகை இல்லாமல் கணக்கிடு செலுத்தலாம்.
இதேபோல் 2024 ஜூலை 23-க்கு முன்பு வீடுகள் வாங்கிய தனிநபர்கள் அல்லது ஹிந்து இணைப்பு குடும்பங்கள் பழைய திட்டத்தின் கீழ் 20 சதவிகித வரியை இண்டக்சேஷன் சலுகையுடன் சேர்த்துக் கணக்கிட்டு வரியைச் செலுத்தலாம்.
இதன் மூலம் மக்கள் தங்களுடைய ரியல் எஸ்டேட் சொத்து விற்பனையில் இரண்டில் எது குறைவான வரியாக சுமை கொண்டு உள்ளதோ அதை தேர்வு செய்து செலுத்தலாம். மேலும் இந்த சலுகை ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்யும் போது தான் பெற முடியும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications